பேரவையில் இன்று
திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறைகள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள் ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது உறுப்பினர்கள் விவாதம் மற்றும் அமைச்சரின் பதிலுரை.
முன்னாள் எம்எல்ஏ மறைவுக்கு இரங்கல்
தமிழ்நாடு சட்டப்பேரவை புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கூடியதும், நீண்டகாலம் அவையின் உறுப்பின ராக இருந்த வி. கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு இரங்கல் தெரிவித்தார். முன்னாள் உறுப்பினரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்க லையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக கூறி னார். இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
அம்மாவையும் மறந்துவிட்டது ஏன்?
ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டம் குறித்து அதிமுக மற்றும் அமைச்சர்களிடையே கார சார விவாதம் நடைபெற்றது. ஒரு கட்டத்தில், “ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த தாய் திட்டத்தை தொடராமல் கைவிட்டது அதிமுக ஆட்சித் தான்”என்றார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “அண்ணாவையும் மறந்து விட்டார்கள்.. அம்மாவையும் (ஜெயலலிதா) மறந்து விட்டீர்கள்” என்றார்.
தனியார் வேளாண் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை
தனியார் வேளாண் கல்லூரி அமைக்க அனுமதி அளிக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதா? என்று சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், “தனியார் வேளாண் கல்லூரிகள் அனுமதி அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டில் வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு தற்போது பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. தற்போது வரை 70 ஆயிரம் மாணவர்கள் படித்து வெளியே வந்துள்ளனர். ஆண்டுக்கு 4 ஆயிரம் பேர் படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். இங்கு படித்த மாணவர்கள் வெளிநாடுகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவ தாக” கூறினார்.
நிதியின்றி தள்ளாடுகிறது ஐடி துறை
அதிமுக எம்எல்ஏ முனுசாமி, “தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழ் நாடு மின் ஆளுமை நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் திறன் மிகு மையம் சென்னையில் மட்டுமின்றி ஓசூர், சூலூரில் அமைக்க வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்து பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘நான் நிதி அமைச்சராக இருந்தபோது இந்த துறைக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.130 கோடிதான் ஒதுக்கப் பட்டுள்ளது. மறுபுறம் இன்று தமிழக அரசின் நிதி நிலைமை தட்டுப்பாட்டில் உள்ளது. ஐடி துறையும் நிதி தட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ரூ.300 கோடிக்கு மேற்பட்ட நிதியை ஐடி துறையிடம் இருந்து தமிழக அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. மானிய நிதியும் துறைக்கு வந்து சேரவில்லை. நிதி நிலை சீராகும் போது உறுப்பி னர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப் படும்” என்றார்.
ஏஐ குறித்து மாணவர்களுக்கு பயிற்சி
“செயற்கை நுண்ணறிவு மையம் ஓசூரில் அமைக்கப் படுமா என்று அதிமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதி லளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறோம். சிறந்து விளங்கும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங் களை தொடர்பு கொண்டு சென்னையில் கிளைகளை தொடங்குமாறு அழைப்பு விடுத்துள்ளோம். செயற்கை நுண் ணறிவில் முக்கியமானது தகவல் பதிவேற்றம். சுமார் 8 கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் 1921 ஆம் ஆண்டு முதல் உள்ள தகவல்களை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றும் பணி களும் நடைபெற்று வருகின்றன” என்றார்.