tamilnadu

img

கொரோனா போரில் முன்னணியில் நிற்கும் 11 ஆயிரம் செவிலியர்களின் சோக வாழ்க்கை...

கொரோனோ காலம் மட்டுமல்ல... எப்போதுமே  செவிலியர்களின் பணி  போற்றுதலுக் குரியது தான் என்றால் அது மிகையல்ல... இந்தாண்டு கொரோனா தொற்று பரவலை எதிர்த்து உலகமெங்கும் நடைபெறும் போராட்டத்தில் பல கோடிக்கான செவிலியர்கள் முன்னணியில் நிற்கின்றனர்.

தமிழகத்திலும் அந்த வீரமிக்க போராட்டத்தில் மருத்துவர்கள், செவி லியர்கள், மருத்துவ உதவியாளர்கள், தூய்மைக்காவலர்கள், தன்னார்வ லர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் முன்னணியில் உள்ளனர்.இந்தப் போராட்டத்தில் செவிலியர் ்கள் தங்களது குடும்பத்தை மறந்து, குழந்தைகளை மறந்து, உற்றார்-உறவினர்களை மறந்து 24 மணி நேரமும் தங்களை அர்ப்பணித்துள்ளனர்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனி  சாமி, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறை செயலர் பீலா ராஜேஷ் தினம் தோறும் செவிலியர்கள், மருத்துவர்கள் பணியை புகழ்ந்து பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் உள்ளன்போடு பாராட்டு கிறார்களா? உதட்டளவில் பேசுகிறார் களா? என்பதுதான் இன்றைய கேள்வி?

தமிழகத்தில் மருத்துவர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் கடந்த 2015-ஆம் ஆண்டு 8,700 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். 2017ஆம் ஆண்டு 2,500 பேர் தேர்வு செய்யப்பட்ட னர். இவர்களில் 276 பேர் மதுரைமாவட்டத்தில் அரசு  மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.7,700 மட்டுமே. இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் இரண்டு ஆண்டுகள் பணி நிறைவு செய்தால் கால முறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டு நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு உறுதியளித்துள்ளது. ஆனால், ஐந்து வருடங்களாகியும் இன்று வரை அவர்கள் நிரந்தரம் செய்யப்படவில்லை.

செவிலியர் பணியைப் பொறுத்தமட்டில் நிரந்தர செவிலியர், காலமுறைஊதிய செவிலியர் என்ற வித்தியாச மெல்லாம் கிடையாது. இருவர் செய்யும் பணியும் சமமானதுதான்.ஐந்தாண்டுகளாக தமிழக அரசு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும்செவிலியர்களை நிரந்தரப்படுத்தாததால் 2018-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, “சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டுமென”க் கூறியதோடு இதைப் பரிசீலிக்க ஒரு கமிட்டி அமைக்கவேண்டுமென உத்தரவிட்டார்.

இதையடுத்து அன்றைய சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ஜே.ராதா கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவும்அமைக்கப்பட்டது. ஆனால், “சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்” என்ற அடிப்படையில் நிரந்தர செவிலியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை (ரூ.44 ஆயிரம்)வழங்காமல் வெறும் ரூ.14 ஆயிரம் மட்டுமே  தொகுப்பூதியமாக வழங்குகிறது.  பணியில் சேர்ந்து ஐந்தாண்டுகளாகியும்  மருத்துவர் தேர்வாணையத்தின்  மூலம் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.தமிழக அரசு செவிலியர் பணிக்குயாரையும் நேரடியாக நியமனம் செய்வ தில்லை. மாறாக ஒப்பந்த முறையில் பலவருடங்கள் பணியாற்றிய பின்தான் அவர்கள் நிரந்தரம் செய்யப்படு கிறார்கள்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டு மெனில் இந்த கொரோனா காலத்தில் நிரந்தரச் செவிலியர்களுக்கு இணையாகபணியாற்றும் இவர்களுக்கு ஊதியத்தில் பாரபட்சம் காட்டுகிறது அரசு.உலக சுகாதார நிறுவனம் (WHO)2020-ஆம் ஆண்டை செவிலியர் களுக்கான ஆண்டாக அறிவித்துள்ளது. கொரோனா போராட்டத்தில் “முன்னணி வீரர்கள்” செவிலியர்கள் என “மந்திரம்” போல் சொல்லிக் கொண்டிருக்கும் தமிழக முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும் 11,200 செவிலியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதுவே அரசு அவர்களுக்கு மட்டுமல்ல... அவர்களது குடும்பத்திற்குச் செலுத்தும் நன்றிக் கடனாக அமையும்.

தமிழக அரசின் வார்த்தைகள் உள்ளத்திலிருந்து வருகிறதா? உதட்டளவில் உச்சரிக்கப்படுகிறதா? என்பதை இந்த கொரோனா காலம் முடிவதற்குள் தெரிந்துவிடும்.தங்களது கோரிக்கையை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் ஒப்பந்த செவிலியர்கள் மதுரையில் மாவட்டச் செயலாளர் எஸ்.கே.  சுஜாதா தலைமையில் கருப்புப்பட்டை அணிந்து பணியாற்றினர்.