tamilnadu

600 நகரங்களில் தொழிற்சங்கங்கள் போராட்டம்

600 நகரங்களில் தொழிற்சங்கங்கள் போராட்டம்

அமெரிக்காவில் டிரம்ப் அரசுக்கு எதிர்ப்பு  600 நகரங்களில் 

சர்வதேச தொழிலாளர் தினத்தன்று அமெரிக்கா முழுவதும் சுமார் 600 க்கும் மேற்பட்ட நகரங்களில் டிரம்ப் தலைமையிலான அரசாங்கத்தை கண்டித்து  லட்சக்க ணக்கான தொழிலாளர்கள் போராட்ட பேரணி நடத்தி யுள்ளனர்.  நியூயார்க்கிலிருந்து சான்பிரான்சிஸ்கோ வரை பல முக்கியமான அமெரிக்க நகரங்களில் நடைபெற்ற இந்த போராட்டப் பேரணிகளில் தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் கூட்டமைப்புகள் பங்கேற்றன.  குறிப்பாக டிரம்ப் மாற்றி அமைத்துள்ள குடியேற்றக் கொள்கைகள்,  வரிவிதிப்புகள் ஆகியவற்றை கண்டித்துள்ளனர். புலம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஜனநாயக நிறுவ னங்கள் மீதான “முழுப் போர்” என்றும் அந்த நடவடிக்கை க்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஹேமார்க்கெட் போராட்டத்தையும் தியாகிகளையும் நினைவு கூரும் வகையில் சிகாகோ நகரில் தொழிலாளர்களின் வேலை நேரம், ஊதியம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட உரிமை களை பாதுகாக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.   எங்கள் குடும்பங்களையும் அரசுப்பள்ளிகளையும்  முதலாளிகளின் லாபத்திற்காக சுரண்டுகின்றனர். எங்க ளுக்கு போதிய சுகாதார வசதிகளையும், வீடற்ற நிலையில் துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு வீட்டு வசதியையும் செய்துதர வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.    மேலும் கோடீஸ்வரர்கள் தொழிற்சங்கங்களையும் புலம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள். ஏனெனில் இந்த கோடீஸ்வரர்களும் அரசும் எங்கள் கூட்டு சக்திக்கு பயப்படுகிறார்கள். ஆனால் அவர்களை கண்டு நாங்கள் பயப்படவில்லை என்று தொழிற்சங்கங்கள் சூளுரைத்துள்ளன.