tamilnadu

img

பாஜக அரசின் நாசகர சட்டங்களை எதிர்த்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மறியல்

பாஜக அரசின் நாசகர சட்டங்களை எதிர்த்து  தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மறியல்

கும்பகோணம், பிப்.13- தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கும், தொழிற்சங்கத்தை அழிக்கும் 4 தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும்; மகாத்மா காந்தி நூறுநாள் வேலை உறுதியளிப்பு சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்; மின்சார திருத்த சட்டம் 2025, அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் ஷாந்தி-2025 சட்டம், விதை மசோதா-2025 உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி பிப்.12 அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. அதனொரு பகுதியாக கும்பகோணம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது.  கும்பகோணம்  திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம், திரு புவனம் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியத்தில் திருபுவனம் கடைவீதியில் இருந்து ஊர்வலமாக வந்து திருபுவனம் அஞ்சலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போரா ட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணை தலைவர் சேகர் தலைமை வகித்தார். ஐஎன்டியுசி துளசிராமன், தொமுச மணிவண்ணன், மதிமுக சரவணன், ஓய்வூதியர் சங்க வாசுதேவன், பன்னீ ர்செல்வம் உள்ளிட்ட 60 பேர் கலந்து கொண்டனர்.   கும்பகோணம் ஒன்றியம் தேவனாஞ்சேரி கடைவீதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் ராஜா, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், சிபிஎம் செயற்குழு உறுப்பினர் அருள் அரசன், விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் சி. நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் நாச்சியார்கோவில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் முருகன், சிஐடியு ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  திருத்துறைப்பூண்டி   ஒன்றிய பாஜக அரசின் நாசகர, தொழிலாளர், விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய பொது வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் வியாழனன்று நடைபெற்றது.  திருத்துறைப்பூண்டி தலைமை தபால் அலுவலகம் முன்பாக நடை பெற்ற போராட்டத்திற்கு, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆர். சந்திரசேகர ஆசாத், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.பி. ஜோதிபாசு ஆகியோர் தலைமையில் எஸ்கேஎம் மாவட்ட நிர்வாகிகள் கே.ஆர்.ஜோசப், எஸ்.சாமிநாதன், எம். ஜெயபிரகாஷ், கே.ராஜா, ஆறு.பிரகாஷ் உள்ளிட்ட சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. ஜோதிபாசு, கே.ஜி. ரகுராமன் மற்றும் மத்திய தொழிற்சங்கம், எஸ்.கே.எம் கூட்டமைப்பு, லிகாய் காப்பீட்டு ஊழியர்கள் சங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், சிபிஐ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, உலகநாதன் உள்ளிடோர் கண்டன உரையாற்றினர்.  திருவாரூர்  அகில இந்திய ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் எல்ஐசி ஊழியர்கள் மற்றும் லிகாய் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் தஞ்சை கோட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் குரு. சந்திரசேகரன், லிகாய் முகவர் சங்கம் சார்பாக கோட்ட இணைச் செயலாளர் மாதவ வேலன், தலைவர் பாலு மற்றும் பலர் உரையாற்றினர்.  ஆர்ப்பாட்டத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், முகவர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  தஞ்சாவூர்  தஞ்சாவூரில், எல்ஐசி கோட்ட அலுவலகம் முன்பு, காப்பீட்டுக் கழக ஊழியர்கள், எல்ஐசி முகவர்கள், வங்கி ஊழி யர்கள் வேலை நிறுத்தம் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் தஞ்சைக் கோட்டத் தலைவர் வ.சேதுராமன் தலைமை வகித்தார். லிகாய் மாநிலச் செயலாளர் என்.ராஜா, வங்கி ஊழியர் சங்க தஞ்சை மாவட்ட பொதுச் செயலாளர் கமலவாசன்,  தஞ்சை மாவட்ட வங்கி ஊழியர் சங்கச் செயலாளர் பி. அரவிந்த், கூட்டுறவு ஊழியர் சங்கத் தலைவர் கோவிந்தன், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், தஞ்சைக் கோட்டம், முன்னாள் தலைவர் சே. செல்வராஜ், வங்கி ஊழியர் சங்கம் புவனா, மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் பிரபு, காப்பீட்டுக் ஓய்வூதியர் சங்கம் அகில இந்திய துணைத் தலைவர் ஆர். புண்ணிய மூர்த்தி, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் தஞ்சைக் கோட்டப் பொதுச் செயலாளர், இரா. விஜயகுமார் ஆகியோர் பேசினர்.  இந்த வேலைநிறுத்த மறியலில் அனைத்து தொழிற்சங்கங்கள், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள், விசிக, காங்கிரஸ், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உட்பட வர்க்க வெகுஜன அரங்கங்களின் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.