tamilnadu

img

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகை, டிச.24- தொடர் விடுமுறை காரணமாக உதகையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது பள்ளிகளுக்கு அரை யாண்டு தேர்வு விடுமுறை விடப்பட் டுள்ளது. மேலும், கிறிஸ்துமஸ் மற் றும் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதி கரித்துள்ளது. கேரளம், கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும்  தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்க ளில் இருந்தும் உதகைக்கு சுற்றுலாப்  பயணிகள் வாகனங்களில் வந்த வண் ணம் உள்ளனர். இதனால் உதகையி லுள்ள சுற்றுலாத் தலங்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. அதன்படி, புதனன்று அரசு தாவர வியல் பூங்கா, படகு இல்லம் பகுதி யில் எண்ணற்றோர் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர். அதேபோல், ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, கர்நாடகா தோட்டக்கலை பூங்கா, பைக்காரா படகு இல்லம், சூட்டிங் மட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்று லாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நகரில் கமர்சியல் சாலை, சேரிங் கிராஸ், தொட்டபெட்டா, ஸ்பென்ஷர் சாலை, படகு இல்ல சாலைகளில் சுற்றுலா வாகனங்கள் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டது. பிற இடங்களில் இருந்து உத கைக்கு வரும் வாகனங்களை குன் னூர் சந்திப்பு, பன் சிட்டியில் நிறுத் தப்பட்டு மாற்றுப்பாதையான மஞ்ச னக்கொரை வழியாக போக்குவரத்து  போலீசார் திருப்பி விட்டனர். போக்கு வரத்து நெரிசலால் சுற்றுலாப் பயணி கள் குறிப்பிட்ட நேரத்திற்கு, உரிய இடங்களுக்கு செல்ல முடியாமல்  அவதிக்குள்ளாகினர். மேலும், தங் கும் விடுதிகள் நிரம்பியுள்ளதால், தங்குவதற்கு இடமின்றியும், உண வின்றியும் சுற்றுலாப் பயணிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.