tamilnadu

img

1000 டி-சர்ட்டுகள் வழங்கிய திருப்பூர் தோழர்

1000 டி-சர்ட்டுகள் வழங்கிய திருப்பூர் தோழர்

மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாட்டிற்கு திருப்பூர் முருங்கப்பாளையத்தைச் சேர்ந்த வாஞ்சி ரவி ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 1000 பின்னலாடைகளைக் கொண்டு வந்து வெள்ளியன்று வழங்கினார். மாநாடு நடைபெறும் சீத்தாராம் யெச்சூரி நகரில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். உடன் மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், மாதர் சங்க மூத்த தலைவர் என். அமிர்தம், திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். மைதிலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.