tamilnadu

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஏப்.22ல் வேட்பு மனுத் தாக்கல்

மதுரை, ஏப்.11-திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு ஏப்.22 முதல் ஏப்.29 வரை பெறப்படும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்.30 ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் மே 2 ஆகும். வாக்குப் பதிவு மே 19 அன்றும்.வாக்குகள் எண்ணிக்கை மே 23 அன்றும் நடைபெறும். 1.1.2019 அன்று தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், இந்த இடைத்தேர்தல் நடத்தப்படும். இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,50,533,பெண் வாக்காளர்கள் 1,53,918, இதரர் 27 எனமொத்தம் 3,04,478 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் மதுரைமாவட்டம் முழுவதும் அமலில் இருக்கும். வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும்மாநில அரசுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பொருந்தும். இத்தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மதுரைமாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.