tamilnadu

img

மத்திய அரசின் அவசரச்சட்டங்களுக்கு எதிராக சட்டரீதியான தீர்மானத்திற்கு சிபிஎம் நோட்டீஸ்... பி.ஆர். நடராஜன் எம்.பி., மக்களவையில் தாக்கல்

புதுதில்லி:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசரச்சட்டங் களை இந்த அவை ஏற்க வில்லை என்று கூறி நான்குசட்டரீதியான தீர்மானங் களுக்கு (statutory resolutions), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் நோட்டீஸ் அளித்துள் ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும்திங்கள்கிழமையன்று தொடங்குகிறது. இக்கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்டங்கள்அனைத்தையும் இந்த அவைஏற்கவில்லை என்று கூறி,ஒவ்வொரு அவசரச் சட்டத்திற்கு எதிராகவும் சட்டரீதியான தீர்மானத்தை பி.ஆர். நடராஜன் கொண்டுவந்து அதற்கான அறிவிப்பை மக்களவைசபாநாயகருக்கு அளித்துள் ளார்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள வரி மற்றும் இதர சட்டங்கள் (சில ஷரத்துக் களைத் தளர்த்துதல்) அவசரச்சட்டம், இந்திய மருந்து மத்திய கவுன்சில் (திருத்த) அவசரச் சட்டம், வங்கி திவால்நிலை சட்ட (திருத்த) அவசரச் சட்டம்மற்றும் விவசாயிகள் உற்பத்திவர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதிசெய்து தருதல்) அவசரச் சட்டம் ஆகிய நான்கு அவசரச் சட்டங்களையும் இந்த அவை ஏற்கவில்லை என்கிறசட்டரீதியான தீர்மானங்களுக் கான நோட்டீஸ்களை பி.ஆர்.நடராஜன் தாக்கல் செய்துள்ளார். (ந.நி.)