இனப்படுகொலை எதிர்ப்பு உறுதிமொழி ஆயிரக்கணக்கானோர் கையெழுத்து
மே 21-ல் காசா மீது இஸ்ரேல் யுத்தத்தைத் தீவிரமாக்கியிரு க்கும் வேளையில், பாலஸ்தீனத்தில் உள்ளவ ர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பாலஸ்தீனியர்கள் உறுதிமொழி இயக்கத்தில் இறங்கினர். உலகம் முழுவதும் ஆயிரக்கணக் கானோர், பல பிரமுகர்கள் உட்பட, இனப்படுகொலை எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்றுக் கையெழுத்திட்டனர். உறுதிமொழியின் முக்கிய அம்சங்கள் இந்த உறுதிமொழியில் கையெழுத்திட்ட வர்கள்: - பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படு கொலையைக் கண்டிக்கிறார்கள் - பட்டினியை யுத்தத்தில் ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைக் கண்டிக்கிறார்கள் - உடனடி போர் நிறுத்தத்தை ஆதரிக்கிறார்கள் - பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலை எதிர்க்கிறார்கள் - பாலஸ்தீனியர்கள் தங்களின் சொந்த நாட்டிற்குத் திரும்ப உரிமை கொண்டவர்கள் என உறுதி செய்கிறார்கள் - இஸ்ரேலுக்கு ராணுவ ஆயுதங்கள் சப்ளை தடையைக் கோருகின்றனர் - இஸ்ரேலிய சிறைகளில் உள்ள ஆயிரக் கணக்கான பாலஸ்தீன அரசியல் கைதி களை விடுதலை செய்யக் கோருகிறார்கள் உறுதிமொழி வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல, செயலிலும் இருக்க வேண்டும் என்கிறது.
அமெரிக்காவில் விவசாய சங்க ஊழியர்கள் கைது
பல லட்சக்கணக்கான குடியேறிகளை பெருந்திரளாக நாடு கடத்தும் டிரம்பின் நடவடிக்கைகள், தொழிலாளர்களை, விவசாயிகளை, அமைப்பு ரீதியாகத் திரட்ட முயல்வோருக்கு எதிராக உள்ளன. பேச்சுரிமை கடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. 14 விவசாய தொழிலாளர்கள் கைது மே 2-ல் 14 விவசாய பண்ணை தொழிலாளர்களை குடியேற்றம் மற்றும் சுங்க வரிகள் அமலாக்கப் பிரிவு கைது செய்துள்ளது. ஐக்கிய பண்ணை தொழிலாளர் சங்கம் இவர்களின் விடுதலையைக் கோரியுள்ளது. இந்த 14 பேரும் லைன்-எட்டி & அண்ட் சன்ஸ் என்ற பண்ணையில் பணிபுரிவோர். பணிக்கு பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். போராட்டம் தொடர்கிறது 1966-ல் தொடங்கப்பட்ட ஐக்கிய பண்ணை தொழிலாளர் சங்கம் மே 19-ல் நியூயார்க் மாநகரிலும், 14 பேர் கைது செய்யப்பட்ட கென்ட் நகரிலும் பேரணிகளை நடத்தியது. ஆண்டுக்கு 10 லட்சம் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களை நாடு கடத்தும் டிரம்பின் திட்டத்தை குடியேற்றம் மற்றும் சுங்க வரிகள் அமலாக்கப் பிரிவு அமலாக்கி வருகிறது. சோசலிசம் மற்றும் விடுதலைக்கான கட்சி மற்றும் சில அமைப்புகள் கைது செய்யப் பட்டுள்ளோருக்கு உதவி செய்வதற்காக நிதி வசூலிலும் ஈடுபட்டுள்ளன.