வெண்மணி தியாகிகளின் நினைவாக, வீடில்லாத ஏழை - எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை, நிலப்பட்டா கோரி மனு கொடுக்கும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலூகா குழு சார்பில் நடைபெற்றது. இதில் காங்கேயம், நத்தாக்காடையூர், நல்லகவுண்டன்வலசு, தொட்டிபாளையம், கரட்டுப்பாளையம், மூத்தம்பாளையம், வெள்ளக்கோவில் நடேசன் நகர், சிவநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நிறைவாக காங்கேயம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.