tamilnadu

img

வானமே வீடு

இது தரையிலான் குருவி (Apus apus). இந்தப் பறவையை விடாமல் விஞ்ஞானிகள் துரத்துகிறார்கள். ஒவ்வொரு முறையும் புதிய, புதிய தகவல்கள் கிடைக்கின்றன. பத்து மாதங்கள் தரையே இறங்காமல் பறக்கிறது. இவ்வளவு நேரத்திற்கு வேறு எந்த பறவையாலும் பறக்க முடியாது. தனது இரையைக்கூட பறந்து கொண்டே சேகரித்துக் கொள்கிறது. இது என்ன.. பறக்கும்போது பெரிய தூக்கமே போடுகிறது.  ஒருவேளை, தரையிறங்கி விட்டால் மீண்டும் பறப்பது சிரமம். அதன் கால்கள் மிகவும் பலவீனமாக இருப்பதுதான் காரணமாம். ஆய்வுகள் தொடர்கின்றன.