திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புதிய கட்டிடம் வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவைத் தொடர்ந்து, புதிய கட்டிடத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், லலிதா ஆகியோர் தங்களது தினசரி பணிகளை மேற்கொண்டனர்.
