45 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு
வான்புகழ் வள்ளுவத்தை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் உயரிய நோக்கம் கொண்ட திருக்குறள் மொழி பெயர்ப்பு திட்டத்தை, பிற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் எதிர்வரும் 3 ஆண்டுகளில் நிறை வேற்றிட மேலும் 45 மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கப்படும். மேலும், 500 தமிழ் இலக்கிய நூல்களை மொழிபெயர்க்க ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
தமிழ் புத்தக திருவிழா
ஓலைச் சுவடிகளை மின் பதிப்பாக்கம் செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சிங்கப்பூர், துபாய், கோலாலம் பூரில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், ஐ.நாவின் அனைத்து அலு வல் மொழிகளில் மொழிபெயர்ப்பு பெற்ற நூல் என்ற பெருமையை திருக்குறள் பெறும். தமிழின் தொன்மை தொடர்ச்சியை அறிய மதுரையில் உலகத் தமிழ் கண்காட்சி மையம் அமைக்கப்படும். இந்திய துணை கண்டத்தின் வர லாறு தமிழ் மண்ணில் இருந்துதான் தொடங்க வேண்டும். தமிழ் புத்தக திருவிழா இனி மும்பை, தில்லி, கொல்கத்தா போன்ற மற்ற நகரங்களிலும் நடத்தப்படும்.
உலகத் தமிழ் ஒலிம்பியாட்
தமிழ் செம்மொழியின் பெருமைகளையும் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளையும் உலகத் தமிழ் இளைஞர்களி டையே பரவிடச் செய்யும் நோக்கத்தில், உலகத் தமிழ் ஒலிம் பியாட் போட்டி இனி ஆண்டுதோறும் நடத்தப்படும். 3
ஆயிரம் புதிய பேருந்துகள்
டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயங் கும் பேருந்துகளாக மாற்ற ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்ப டும். வரும் நிதியாண்டில் 3000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.1031 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை, மதுரை, கோவையில் இந்த ஆண்டு முதல் மின் பேருந்து சேவை தொடங்கப்படும். சென்னையில் 950, மதுரையில் 100, கோவை யில் 75 மின் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்படும். தமிழகம் முழுவதும் 1,125 மின் பேருந்துகள் அறிமுகப் படுத்தப்படும். 700 பழைய பேருந்துகளை புதுப்பிக்க நட வடிக்கை எடுக்கப்படும். ரூ.120 கோடியில் பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும். போக்குவரத்து துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.27,168 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு விமான நிலை யம் முக்கியம் என்பதை நன்கு அறிந்த அரசு, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு ரூ. 2,938 கோடி மதிப்புள்ள நிலத்தை கைய கப்படுத்தி ஒன்றிய அரசுக்கு வழங்கியுள்ளது. சேலம் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பரந்தூர் விமான நிலையப் பணி கள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தென் மாநிலங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலை யம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்ப டும். திருச்சியில் பொறியியல் தொழில் பூங்கா அமைக்கப் படும்.
செமி கண்டக்டர்
தமிழ்நாட்டில் செமி கண்டெக்டர் இயக்கம் செயல்படுத்தப் படும். கோவை மற்றும் பல்லடத்தில் செமி கண்டக்டர் தொழிற் பூங்கா அமைக்கப்படும். நகர்ப்புற சாலைப் பணிகளுக்கு ரூ.3,750 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சாலைகள் மேம்பாடு
சென்னை மாநகராட்சியில் ரூ.486 கோடி மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தப்படும். கோவை சாலைகள் ரூ.200 கோடியில், மதுரை சாலைகள் ரூ.130 கோடியில் மேம்படுத்தப்படும்.
மாதந்தோறும் ரூ.2000 உதவித்தொகை
தாயுமானவர் திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்து உற வினர்களின் பாதுகாப்பில் வளரும் 50,000 குழந்தை களுக்கு, 18 வயது வரை இடைநிற்றல் இன்றி பள்ளிப் படிப்பை தொடர மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப் படும்.
ஓசூர், விருதுநகரில் டைடல் பூங்கா!
25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் டைடல் பூங்காவை அமைத்து தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்ட நவீன தமிழ்நாட்டின் சிற்பியான கலைஞர் வகுத்து தந்த தகவல் நெடுஞ்சாலையில், தமிழ்நாட்டின் அனைத்து நக ரங்களும் இணைந்து பயனடைய வேண்டும் என்ற நோக்கத் தோடு, ஓசூர் மற்றும் விருதுநகரில் புதிய டைடல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் 6,600 இளை ஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவர்.
கடலூர், மதுரையில் தொழில் பூங்கா
மதுரை, கடலூரில் ரூ.250 கோடியில் காலணித் தொழிற் பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் 20,000 பேர் வேலை வாய்ப்பு பெற்று பயன்பெறுவர். 9 இடங்களில் ரூ.3,566 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். இதன்மூலம் 17,500 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.
எழில்மிகு பூங்கா
ஊட்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரூ.70 கோடியில் எழில் மிகு சுற்றுலாப் பூங்கா அமைக்கப்படும். அதிகளவில் சுற்று லாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், நீலகிரி மலையின் இயற்கைச் சூழலுக்கு இணங்க நறுமணப் பொருட்கள் தோட்டம், வனவியல் மற்றும் பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிப்பாதைகள் இடம்பெறும்.
அன்னதான திட்டம்
ரூ.125 கோடியில் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களுக்கு திருப்பணி செய்யப்படும். சுமார் 7000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்து சமய அறநிலையத் துறை சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு உள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 2,662 திருக்கோயில்களில் பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்குகள் நடைபெற்று உள்ளன. 777 கோயில்களில் நடைபெறும் அன்னதான திட்டத் தின் மூலம் தினசரி சராசரியாக ஒரு லட்சம் பேர் பய னடைகின்றனர். 40
ஆயிரம் பேர் தேர்வு
கடந்த 4 ஆண்டுகளில் 57 ஆயிரம் அரசுப் பணியாளர் கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு அரசுத் துறை களில் காலியாக உள்ள 40 ஆயிரம் பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும். 150 வகையான அரசு சேவை களை இணைய வழியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு ஊழியர்களுக்கு வங்கிகளில் கடன் பெற சலுகைகள் வழங்கப்படும்.
5 லட்சம் பேருக்கு இலவச பட்டா
நகர்ப்புறப் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டம். பெண்களின் பாதுகாப்புக்கு ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு. வரும் நிதியாண்டில் 5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும். பழங்குடியினர் வாழ்வாதாரம் கொள்கைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.
“ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள்”
வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் நோக்கத்துடன் சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட 1 லட்சம் புதிய வீடுகள் கட்டும் பணிகள் அனைத்து மாவட்டங்களி லும் விரைவாக நடைபெற்று வருகின்றன. அதை தொடர்ந்து, 2025 - 2026 ஆண்டு ஒரு லட்சம் புதிய வீடு கள் ரூ.3,500 கோடியில் கட்டும் பணிகள் தொடங்கப்படும். முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2025-2026 ஆண்டு 6,100 கி.மீ நீளமுள்ள கிராம சாலைகள் ரூ.2,100 கோடி செலவில் மேம்படுத்தப்படும். கிராம மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் தொடர் பரா மரிப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் நிதிக்குழு மானியத்தில் இருந்து 2025-2026 ஆண்டுக்கு ரூ.120 கோடி விடு விக்கப்படும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.1,087 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வேளச்சேரி மற்றும் கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் சந்திப்பு வரை 3 கி.மீ நீளத்திற்கு ஒரு மேம்பாலம் ரூ.310 கோடி மதிப்பில் அமைக்கப்படும். ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ.3,796 கோடியை ஒன்றிய அரசு விடுவிக்க வில்லை. அனைத்து நகர்ப்புறங்களிலும் சாலைகளை மேம்படுத்த ரூ.3,700 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.