சிபிஎம் மாநாடு: நிதி அளிப்பு பொதுக்கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு, ஏப்ரல் 2 முதல் 6 ஆம் தேதி வரை மதுரையில் நடைபெறுகிறது. இதையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டம் மணப்பாறை வட்டக்குழு சார்பில், வியாழனன்று புத்தாநத்தத்தில் அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டக்குழு உறுப்பினர் அய்யாவு தலைமை தாங்கினார். புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். இரண்டாவது கட்டமாக மாநாட்டு நிதி ரூ.1 லட்சத்தை மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கண்ணன், நஸ்ரின் பானு, வட்டக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், சுரேஷ், அழகர், சேதுராமன், கணபதி, நவமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டக்குழு உறுப்பினர் பெரியசாமி வரவேற்றார். பிச்சைக் கண்ணு நன்றி கூறினார்.
மார்ச் 21 விவசாயிகள் குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மார்ச் 21 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு, விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். எனவே, விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு நவீன தொழில்நுட்பங்கள், இடுபொருள் இருப்பு விவரங்கள் மற்றும் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்வதுடன், விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.