காரல் மார்க்ஸ் நினைவு தினம் அனுசரிப்பு
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், கட்டுமான தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில், மாமேதை காரல் மார்க்ஸ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் தேவேந்திரன் தலைமை வகித்தார். நகரப் பொறுப்பாளர் வெங்கடேசன், நகரக் கிளை உறுப்பினர் இரா.வசந்தகுமார், அரவிந்தன், மாவட்டக் குழு உறுப்பினர் அய்யப்பன், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினர்.
149 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
அரியலூர் மாவட்டம் செந்துறையிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், 149 பயனாளிகளுக்கு ரூ.67.33 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ், 149 பயனாளிகளுக்கு ரூ.67.33 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 184 மனுக்கள் பெறப்பட்டன. அதில், 161 மனுக்கள் ஏற்கப்பட்டு 23 மனுக்கள் விசாரணையில் உள்ளது.