மாமேதை காரல் மார்க்ஸ் நினைவுதின கொடியேற்று நிகழ்ச்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெறுவதையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கும்பகோணம் திருவிடைமருதூர் பகுதிகளில் மாமேதை காரல் மார்க்ஸ் நினைவு தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணம் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் குடந்தை மாநகர செயலாளர் செந்தில்குமார், மூத்த உறுப்பினர்கள் ராஜகோபாலன், சந்திரசேகரன், நகரக்குழு உறுப்பினர்கள் சேகர், ராமமூர்த்தி, பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகியோர் செங்கொடியை ஏற்றினார். திருவிடைமருதூர் வடக்கு திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியத்தில் தோழர் பி. ராமமூர்த்தி நினைவு அரங்கத்தில் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கர், மூத்ததோழர் ஜீவபாரதி, மாவட்டக் குழு உறுப்பினர் நாகேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சேகர், அம்சவல்லி, தேவி உள்ளிட்டோர் செங்கொடியை ஏற்றி வீரவணக்கம் செலுத்தினர். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஒன்றியம், திருக்கடையூர் அருகேயுள்ள டி. மணல்மேடு கிராமத்தில் மாமேதை காரல்மார்க்ஸ் நினைவு தினம் மற்றும் மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை கொண்டாடும் விதமாக கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சி கிளைச் செயலாளர்கள் உதயகுமார், விமலா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. இராமகிருஷ்ணன் கட்சியின் கொடியினை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். துரைராஜ், டி. சிம்சன், தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.குணசுந்தரி, எம். ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கிராம முக்கியஸ்தர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர். 24 ஆவது மாநாட்டை குறிக்கும் விதமாக கிராம மக்கள் 24 செங்கொடிகளை ஏற்றி வைத்து கோலங்கள் வரைந்து மாநாட்டை கொண்டாடினர், தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில், மாமேதை கார்ல மார்க்ஸ் நிநினைவு தினக் கொடியேற்று நிகழ்ச்சி வெள்ளிக்கிழமையன்று ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மூத்த தோழர் வீ.கருப்பையா ஆகியோர் பங்கேற்று சேதுபாவாசத்திரம், காரங்குடா, கழுமங்குடா, செந்தலைப்பட்டினம், பூவாணம் ஆகிய கிளைகளில் செங்கொடி ஏற்றினர். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாட்டு விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. பூவாணம் கிளையின் சார்பில், அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூபாய் 7 ஆயிரத்து 500 மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரனிடம் வழங்கப்பட்டது. நிகழ்வில், ஒன்றியக்குழு உறுப்பினர் நவநேசன், கிளைச் செயலாளர் எழிலரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் வீரக்குறிச்சி கிளையில் மாமேதை காரல் மார்க்ஸ் நினைவு தினக் கொடியேற்று நிகழ்ச்சி, ஒன்றியக்குழு உறுப்பினர் கே.பெஞ்சமின் தலைமையில் நடைபெற்றது. மூத்த தோழர் பி.பக்கிரிசாமி கட்சிக் கொடியேற்றி வைத்தார். கிளைச் செயலாளர் ஏ.சூசைராஜ், பாக்கியம், ஆசீர்வாதம், ஜெயக்கொடி, மாதர் சங்கம் ரெஜினா மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.