tamilnadu

img

மின் ஊழியர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டம்

மின் ஊழியர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் வட்டம், அரியலூர் கோட்டத்திற்குட்பட்ட ஜெயங்கொண்டம் தெற்கு பிரிவில் கடந்த 6-ம் தேதி, உயர் அழுத்த மின் பாதையில் பணிபுரிந்த போது, கேங்மேன் ராஜாராம் என்பவர் மின் விபத்தில் உயிரிழந்தார்.  இதையடுத்து, ராஜாராமுக்கு நீதி கேட்டும், அலுவலர்களை பாதுகாக்கின்ற வகையில் கம்பியாளர், கேங்மேனை தற்காலிக பணி இடைநீக்கம் செய்த நடவடிக்கைக்கு எதிராகவும், இந்த சம்பவத்தில் உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு ) சார்பில் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை மாலை முதல், அமைப்பின் திருச்சி மண்டல செயலாளர் எஸ். அகஸ்டின் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.  இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த அமைப்பின் சார்பில், திருச்சி மண்டல பகிர்மான தலைமை பொறியாளர் அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.