சிபிஎம் முன்னாள் நகரச் செயலாளர்
மாநாட்டு நிதி வழங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு நிர்வாகிகள் கூட்டம் திருவாரூர் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வரவேற்பு குழு தலைவர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாநாட்டு பணிகள் மற்றும் நிதி தொடர்பான விபரங்களை மாவட்டச் செயலாளர் டி. முருகையன் விளக்கிப் பேசினார். மார்ச் 23-ஆம் தேதி, மாவீரன் தோழர் பகத்சிங் நினைவு நாள் அன்று திருவாரூர் நகரத்தில் செந்தொண்டர் பேரணியை நடத்துவது எனவும், மதுரை மாநாட்டிற்கு 400 செந்தொண்டர்களை அனுப்புவது எனவும் முடிவு செய்யப்பட்டது. மாநாட்டுப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள மாவட்டத்தில் கிளைக்கு ஒரு வாகனம் என்ற அடிப்படையில் 8000 தோழர்கள் பங்கேற்பது எனவும், சிஐடியு அமைப்பின் சார்பாக 2000 தோழர்களை பங்கேற்க வைக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளர் பாலசுப்ரமணியனின் துணைவியார் சகுந்தலா பாலசுப்ரமணியனின் 14-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, மாநாட்டு நிதியாக ரூ,10,000-ஐ வழங்கினார். நிகழ்ச்சியில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், வரவேற்புக்குழு பொருளாளர் சி.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள், வெகுஜன அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.