திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு : 750 காளைகள் பங்கேற்பு
தஞ்சாவூர், பிப்.14- தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர் பட்டியில் புனித அந்தோணியார் ஆலய பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வரு கிறது. அதன்படி இந்த ஆண்டு சனிக் கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 750 காளைகள் பதிவு செய்யப்பட்டன. கால் நடை பராமரிப்பு துறை குழுவினர் உரிய சோதனைகளை மேற்கொண்டனர். மேலும் 400 மாடுபிடி வீரர்கள் தங்களின் பெயரை பதிவு செய்திருந்தனர். 8 பிரிவுகளாக மாடுபிடி வீரர்கள் பிரிக் கப்பட்டு களமிறக்கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. பல காளைகளை வீரர்கள் அடக்க முடியாமல் திணறினர். சில காளைகள் சுற்றி சுற்றி வந்து மாடு பிடி வீரர்களை தூக்கி வீசின. மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், டைனிங் டேபிள், எவர்சில்வர் அண்டா என்று ஏராளமான பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.