tamilnadu

img

ரங்கசாமியா, நாராயணசாமியா, கன்பியூஸ் ஆன அமித் ஷா! பாஜக தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமே காமெடி...

ரங்கசாமியா, நாராயணசாமியா, கன்பியூஸ் ஆன அமித் ஷா! பாஜக தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமே காமெடி...

புதுச்சேரியில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், காரைக் காலில் உள்துறை அமைச்சர் அமித்  ஷா கலந்து கொண்ட, பாஜக-வின்  முதல் பிரச்சாரக் கூட்டமே ‘காமெடி  கிளப்’ போல மாறிவிட்டது. “ஒன்றிய அரசு எனக்குப் பவர்  தரவில்லை என்றால், நான் தேர்த லையே புறக்கணிப்பேன்” என புதுச் சேரி முதலமைச்சர் ரங்கசாமி சீரிய ஸாகப் பேசிக் கொண்டிருக்க, அதையெல்லாம் துளியும் சட்டை  செய்யாத ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காரைக்கா லில் வந்து இறங்கினார். வரும் வழி யில் தெருச் சுவரில் இருந்த தாமரைச்  சின்னத்திற்குப் பெயிண்ட் அடித்து,  தனது ‘ஆர்ட்’ திறமையைக் காட்டிய  கையோடு மேடை ஏறினார். குழம்பிய மொழிபெயர்ப்பாளர் மேடையில் அமித் ஷா இந்தி யில் அதிரடியாகப் பேச, அதைத் தமிழில் மொழிபெயர்த்தவர் செய்த  சொதப்பல் தான் ஹைலைட். அமித்  ஷா முன்பு இங்கு முதலமைச்ச ராக இருந்த நாராயணசாமி மிக  மோசமான ஆட்சியை வழங்கினார்  என்று குற்றம் சாட்டிக் கொண்டி ருக்க,  மொழிபெயர்ப்பாளரோ ஆர்வக் கோளாறில், “முதலமைச்சர்  நாராயணசாமி சிறப்பாக ஆட்சி செய் கிறார்” என அவுட் ஆஃப் சிலபஸில்  பேசிவிட்டார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. நாராயணசாமி பழைய முதல மைச்சர் என்பதைத் துல்லியமாகத் தெரிந்திருந்த அமித் ஷா, உடனே  குறுக்கிட்டு “அவர் இல்லப்பா... இவர்!” எனத் திருத்தினார். சுதா ரித்துக் கொண்ட மொழிபெயர்ப்பா ளர், உடனே கியரை மாற்றி, “நாராயண சாமி மோசமான ஆட்சியை வழங்கி னார், ரங்கசாமிதான் சூப்பர்” என  அடுத்த தடத்தில் வண்டியை ஓட்டி னார்.  அமித் ஷா-வின் கூட்டத்தின் இந்த பெயர் குழப்ப வீடியோதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. தனக்குத்தானே ‘செக்’ வைத்த அமித் ஷா! மாற்றிப் பேசிவிடக் கூடாது, தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்ட அமித் ஷா, விடாமல் முன்னாள் முதலமைச்சர் நாரா யணசாமி மீது ஊழல் புகார்களை அடுக்கினார். “கடந்த ஐந்து ஆண்டு களில் இந்தியா முன்னேறியுள்ளது, ஆனால் நாராயணசாமி காலத்தில் புதுச்சேரி பின்னோக்கிச் சென்றது” என ஐந்தாண்டுகளுக்கு பிறகும், பழைய பல்லவியையே பாடி முடித் தார். கூட்டத்தை விட்டு போகும்போது,  தப்புத் தப்பாக உளறும் இவர் களை வைத்துக்கொண்டு எப்படி தான், நாம் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோமோ என்று புலம்பிக் கொண்டே அமித் ஷா விமானம் ஏறினார்.