தீரன் சின்னமலை, சி.முத்துசாமி சிலைகள், டாக்டர் சுப்பராயன், கீழப்பழுவூர் சின்னசாமி நினைவரங்கங்கள்
சென்னை, பிப்.13 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பிப்ரவரி 13 வெள்ளிக்கிழமையன்று சென்னையிலிருந்து காணொலி வாயி லாக பல்வேறு நினைவு அரங்குகளையும் சிலைகளையும் திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்டம், நவணி தோட்டக் கூர்பட்டி கிராமத்தில் முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பரா யனுக்கு ரூ.2.66 கோடியில் மார்பளவு சிலையுடன் கூடிய அரங்கம் திறக்கப் பட்டது. அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கிராமத்தில் இந்தி திணிப்பினை எதிர்த்துப் போராடி உயிர்த் தியாகம் செய்த கீழப்பழுவூர் சின்னச்சாமிக்கு ரூ.3 கோடியில் அரங்கம் அமைக் கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடா நிலையில் அமைந்துள்ள தீரன் சின்ன மலை மணிமண்டப வளாகத்தில் ஒரு கோடி ரூபாயில் குதிரையின் மேல் அமர்ந்தபடி உள்ள தீரன் சின்னமலை வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் எல்லைகாட்டு ராமச்சந்திர புரம் கிராமத்தில் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் சி. முத்துசாமிக்கு ரூ.50 லட்சம் ரூபாயில் உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி- செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
