மதுரை, மார்ச் 15-மக்களவைத் தேர்தல் மூலம் பாஜக, அதிமுகவை தோற்கடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது என மூவேந்தர் முன்னேற்றக் கழகமாநிலத் தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் பேசினார்.மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் ஆரப்பாளையம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தபாஜக ஆட்சியையும், அதற்கு உடந்தையாக இருந்த அதிமுக ஆட்சியையும் வாக்காளர்கள் தோற்கடிக்க வேண்டும்.தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராகவும் மக்கள் உள்ளனர். இந்தத் தேர்தல் மூலம் மத்தியில் பாஜக ஆட்சிக்கும், தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கும் வாக்காளர்கள் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். மோடிதான் வைத்ததே சட்டம் என அவசரக் கோலத்தில் எடுத்த முடிவுகள் நாட்டின்பொருளாதாரத்தை சீரழிவிற்கு உள்ளாக்கிவிட்டது. பண மதிப்பிழப்பால் ஏராளமான சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டு கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். ஜிஎஸ்டி-யால் வர்த்தகம்பாதிக்கப்பட்டு வியாபாரிகள், தொழிலாளர்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிமுக, பாஜகவுக்கு மக்கள் நலனில்அக்கறை இல்லை. இவர்களை ஆட்சியைவிட்டு அகற்றும் நேரம் வந்து விட்டது. தமிழகத்தில் 22 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தால் 119 சட்டமன்ற உறுப்பினர்களுடன் திமுக ஆட்சி அமையும்.மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.பிரசாரத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளமாநிலத்தலைவர் ஜான்மோசஸ், மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள் சிவக்குமார், செல்வராஜ், மாநில மகளிரணி செயலர் சுந்தரச்செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.