tamilnadu

img

ஒன்றும் இல்லாத மோடி அரசின் பட்ஜெட் நிலைகுலைந்த பங்குச் சந்தை ரூ.10 லட்சம் கோடி இழப்பு  

ஒன்றும் இல்லாத மோடி அரசின் பட்ஜெட் நிலைகுலைந்த பங்குச் சந்தை ரூ.10 லட்சம் கோடி இழப்பு  

இந்தியாவில் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பின்  ஞாயிற்றுக்கிழமை ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்  கல் செய்யபட்டது. பொதுவாக  ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறையாகும். ஆனால் பட்ஜெட்டை ஒட்டி பங்குச் சந்தைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு, ஞாயிறன்று  செயல்பட்டது. இந்நிலையில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட  வரி  மாற்றங்கள் மற்றும் பொருளாதாரக் காரணிகளால் நாட்டின்  பங்குச் சந்தைகள் நிலைகுலைந்தன. எதிர் கால ஒப்பந்தங்கள் மீதான வரி 0.02%லிருந்து 0.05%-ஆகவும், ஆப்ஷன்ஸ் மீதான வரி 0.15%ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. இந்த குறுகிய கால மற்றும்  நீண்ட கால மூலதன ஆதாய வரிகளில் செய்யப்பட்ட  மாற்றங்கள் முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் வர்த்த கத்திற்கான வரி உயர்த்தப்பட்டது சந்தை சரிவுக்கு ஒரு  முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டில்  நுகர்வுத் திறனை அதிகரிக்க அல்லது நடுத்தர வர்க்கத்  தினருக்குப் பெரிய அளவில் சலுகைகள் வழங்கப்படா தது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என முத லீட்டாளர்கள் கருதுகின்றனர். இதனால் படஜெட் நிறைவு பெற்றப் பின், மும்பை  பங்குச்சந்தையின் 30 முக்கிய பங்குகளைக் கொண்ட  சென்செக்ஸ் 1,546.84 புள்ளிகள் (1.88%) சரிந்து 80,722.94 என்ற அளவில் நிறைவடைந்தது. வர்த்த கத்தின் ஒரு கட்டத்தில் இது 2,800 புள்ளிகளுக்கும் மேல்  சரிந்தது. அதே போல தேசிய பங்குச்சந்தையின் முன்னணி 50 பங்குகளைக் கொண்ட நிப்டி சுமார் 495.20  புள்ளிகள் (1.96%) வீழ்ச்சியடைந்து 24,825.45 என்ற அள வில் முடிவடைந்தது. மிக முக்கியமாக பட்ஜெட் அறி விப்பால் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டா ளர்களின் சொத்து மதிப்பு ஒரே நாளில் கரைந்துள் ளது.