tamilnadu

img

சமூக விடுதலைக்கு களம் அமைத்து கொடுத்தது செங்கொடி இயக்கம்!

சமூக விடுதலைக்கு களம் அமைத்து கொடுத்தது செங்கொடி இயக்கம்!

சிபிஎம் மாநிலச் செயலாளர்  பெ. சண்முகம் பெருமிதம் நாகப்பட்டினம், டிச.25- வெண்மணி தியாகிகளின் 57-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது, “வெண்மணி தியாகிகளின் ஈகம் என்பது வெறும் வரலாறு மட்டுமல்ல, அது ஒரு சமூக மாற்றத்தின் தொடக்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகள் சங்கமும் முன்னெடுத்த வீரியமிக்க போராட்டங்களின் விளைவாக, தஞ்சை மண்ணில் நிலவிய பண்ணை  அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு, விவசாயத் தொழி லாளர்களுக்கு விடுதலை கிடைத்தது. நில மற்ற ஏழைகளுக்கு நில விநியோகம் செய்யப் பட்டதுடன், சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் தீண் டாமைக்கும் எதிராக இந்த இயக்கம் நடத்திய இடை விடாத போராட்டம், இன்று கீழத்தஞ்சை பகுதிகளில்  சமூகப் பாகுபாடு ஒப்பீட்டு அளவில் குறைவாக இருப்பதற்குக் களம் அமைத்துக் கொடுத்தது” என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் நினைவு கூர்ந்தார். விவசாயத் தொழிலாளர்களின் வயிற்றிலடிக்கும் ஒன்றிய அரசு “இன்றும், கிராமப்புற ஏழைகளின் வாழ்வா தாரத்தைப் பாதுகாப்பதில் இடதுசாரிகளின் பங்கு  மகத்தானது. 2005-ஆம் ஆண்டு இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில் பலமாக இருந்தபோது, அவர்களது கடும் அழுத்தத்தின் காரணமாகவே ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச்  சட்டம்’ கொண்டுவரப்பட்டது. கடந்த 20 ஆண்டு களாக வறுமையைக் குறைப்பதிலும், புலம்பெயர் தலைத் தடுப்பதிலும், குறிப்பாகப் பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதிலும் இத்திட்டம் பெரும் பங்காற்றி வருகிறது. ஆனால், தற்போதுள்ள ஒன்றிய பாஜக அரசு  இத்திட்டத்தை முற்றிலும் முடக்கும் வகையில், ‘வி பி ஜி ராம் ஜி’ (VP G RAM G) என்ற புதிய  சட்டத்தை கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி நாடாளு மன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. எதிர்க்கட்சிகளின்  கோரிக்கைகளைத் துச்சமாக மதித்து, பெரும் பான்மை பலத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றப் பட்டுள்ள இச்சட்டம், விவசாயத் தொழிலாளர்களின்  வயிற்றில் அடிக்கும் செயலாகும். இச்சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று, தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நடத்திய பிரம்மாண்ட  போராட்டங்கள் மக்கள் உணர்வையே பிரதிபலித் துள்ளது” என்றும் பெ. சண்முகம் தெரிவித்தார். எஸ்ஐஆர் முறைகேடுகள் முறியடிப்போம்! தமிழகத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் பெரும்  முறைகேடுகள் நடந்துள்ளதாக பெ. சண்முகம்  குற்றம் சாட்டினார். “சுமார் ஒரு கோடி வாக்கா ளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 27 லட்சம் பேர் இறந்து விட்டதாகக் கூறுவது நம்பும்படியாக இல்லை. கவிஞர் புலமைப் பித்தன் போன்ற மறைந்த ஆளுமைகளின் பெயர் கள் பட்டியலில் நீடிக்கும் நிலையில், உயிரோடு இருக்கும் பல்லாயிரக்கணக்கானோரின் பெயர் கள் நீக்கப்பட்டுள்ளன. அவசர கோலத்தில் தயா ரிக்கப்பட்ட இந்தப் பட்டியலைச் சீரமைக்க வேண் டும். 18 வயது நிரம்பிய அனைவரும் பட்டியலில்  இடம்பெறுவதை உறுதி செய்வது தேர்தல் ஆணை யத்தின் கடமை” எனவும் அவர் வலியுறுத்தினார். விவசாயிகள் மற்றும்  தொழிலாளர் நலன் காப்போம் “தற்போது பெய்து வரும் கனமழையால் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் சம்பா  மற்றும் தாளடி சாகுபடிகள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஏக்கருக்கு 8,000 ரூபாய் என்பது தற்போதைய உற்பத்திச் செலவோடு ஒப்பிடுகையில் மிகவும் சொற்பமான தொகை. எனவே, தமிழக அரசு உற்பத்திச் செலவுக்கு ஏற்ப இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும். அதேபோல், ஒன்றிய அரசு கொண்டு வந்து உள்ள நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங் கள் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பவை  ஆகும். கேரள அரசு இச்சட்டங்களை அமல்படுத்த  மாட்டோம் என அறிவித்துள்ளது போல, தமிழக  அரசும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண் டும்” என பெ. சண்முகம் கேட்டுக்கொண்டார். 2026 தேர்தலில் சிபிஎம் நிலைப்பாடு வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை நோக்கம். தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுகை யில், “அதிகமான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது எல்லா கட்சிகளின் விருப்பம். நாங்களும் வரவிருக்கும் பேச்சுவார்த்தையில் கூடு தலான தொகுதிகளைப் பெற முயற்சிப்போம். தமி ழகத்தின் எந்தப் பகுதியில் நின்றாலும் வெற்றி பெறும் வலிமை எமது இயக்கத்திற்கு உண்டு” எனவும் பெ. சண்முகம் குறிப்பிட்டார்.