tamilnadu

img

கரும்பு விவசாயிகள் போராட்டம் வெற்றி பங்குத்தொகை ரூ.14 கோடியை கொடுக்க ஆலை ஒப்புதல்

ஈரோடு, ஜன. 8- நீதிமன்ற உத்தரவுப்படி லாபத்தில் பங்குத்தொகையான ரூ.14 கோடியை விவசாயிகளுக்குக் கொடுக்க பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை ஒப்புதல் அளித்துள்ளது. தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு கட்டுப்பாடு சட்டம் 1966 இன் படி 2004- 05, 2008 -09 ஆண்டுகளில்  விவ சாயிகளுக்கு வழங்க வேண்டிய லாப பங்குத் தொகையை  வழங்கிடக் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்  வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை  உயர்நீதிமன்றம் தீர்ப்பளித் தது. அதன் அடிப்படையில் 9.9.2024 அன்று  மாநில சர்க்கரைத்துறை ஆணை யர் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை  நிலுவையில் உள்ள ரூ.14 கோடி லாபப் பங்குத்தொகையை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டுமென உத்தரவிட்டார். மூன்று மாதங்கள் கடந்த பின்பும்  பண்ணாரி அம்மன் ஆலை விவசாயி களுக்கு பணம் தரவில்லை. இந்நிலை யில் செவ்வாயன்று சத்தியமங்க லத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி மற்றும் கரும்பு விவசாயிகள் சுமார் 5 மணி நேரம் வட்டாட்சியரைச் சந்தித்து மனு கொடுத்து முறையிட்டனர்.  அதன்பிறகு வந்த வட்டாட்சி யர் பண்ணாரி ஆலை நிர்வாக அதி காரிகளை வரவழைத்து முத்தரப்புக் கூட்டம் நடத்த வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில் நீதிமன்ற உத்த ரவுப்படி லாபப்பங்கு நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கி விடுகிறோம் என ஆலை நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இத னால் போராட்டம் முடித்துக்கொள் ளப்பட்டது. இது தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் வெற்றி  என டி.ரவீந்திரன் தெரிவித்தார்.