tamilnadu

எரிவாயு தட்டுப்பாட்டால் தமிழக மக்கள் கடும் அவதி ஒன்றிய அரசின் அலட்சியத்தைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நாளை ஆர்ப்பாட்டம்!

எரிவாயு தட்டுப்பாட்டால் தமிழக மக்கள் கடும் அவதி ஒன்றிய அரசின் அலட்சியத்தைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நாளை ஆர்ப்பாட்டம்!

சென்னை, மார்ச் 13 - எரிவாயு தட்டுப்பாடு பிரச்சனையில், ஒன்றிய அரசு தனது அலட்சியத்தைக் கைவிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15)  அன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங் களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்கள், அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள், பகுதிகள் மற்றும் பேரூர்களிலும் ஒரே நேரத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மக்களின் அடுப்பை  அணைத்த பாஜக அரசு நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வரும் நிலையில், ஒன்றிய பாஜக மற்றும் அதன் கூட்டணி அரசின் தவறான வெளி யுறவுக் கொள்கையும், முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை இன்மையுமே இதற்குக் காரணம் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு மட்டுமின்றி, வணிகப் பயன் பாட்டு எரிவாயு சிலிண்டர்களுக்கும் தட்டுப் ப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவகங்களும் சிறு வணிக நிறுவனங்களும் திணறு கின்றன. குறிப்பாக சிறு-குறு தொழில்கள் அதிகமாக வேரூன்றியுள்ள தமிழ்நாட்டில் இந்த நெருக்கடியின் தாக்கம் மிகவும் கடுமையாக உணரப்படுவதாக மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி கள் கூறியுள்ளன. விவாதிக்கவே மறுப்பது கண்டனத்திற்கு உரியது எரிவாயு தட்டுப்பாடு நெருக்கடியை களைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் வழியாக வலியுறுத்தியும், ஒன்றிய பாஜக அரசு இதுவரை எந்த முறை யான நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை அச்சத்திலும் அவதியிலும் கை விட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத் தில் இது குறித்து பேசவே பிரதமர் மறுப்பு தெரிவிப்பது கடுமையான கண்ட னத்திற்கு உரியது எனவும் கூறியுள்ளன. எனவே, தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் தங்களின் கண்டனத்தை உரத்துப் பதிவு செய்திட வேண்டும் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.