அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி!
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பா வுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கை யில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சி உறுப்பி னர்களை அதிக நேரம் பேச அனுமதிப்பதில்லை, தொலைக்காட்சியில் நீண்ட நேரம் தங்களது பேச்சை நேரலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளை வைத்து தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு மீது, எதிர்க்கட்சித் துணைத்தலைவரும் அதி முக முன்னாள் அமைச்சரு மான ஆர்.பி. உதயகுமார், கடந்த ஜனவரி மாதம் நம் பிக்கையில்லாத் தீர்மானம் அளித்திருந்தார். தமிழ்நாடு சட்டப்பேர வையில் திங்களன்று (மார்ச் 17) கேள்வி நேரம் முடிந்த தும், நேரமில்லா நேரத்தில், பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மா னத்தை வாக்கெடுப்புக்கு விடும்படி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதய குமார் கோரினார். தீர்மா னம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றால் 35 எம்.எல்.ஏக்க ளின் ஆதரவு தேவை என்ற நிலையில், போதிய ஆதரவு இருந்தது. எனவே, தீர்மா னம் உடனே எடுத்துக் கொள் ளப்பட்டது. இதனால், பேர வைத் தலைவர் அப்பாவு, தனது இருக்கையில் இருந்து எழுந்து வெளியே சென்றார். பின்னர், பேரவைத் துணைத்தலைவர் கு.பிச்சா ண்டி, அவையை வழி நடத்தி னார். அப்போது, நம்பிக்கை யில்லாத் தீர்மானம் விவா தத்திற்கு அனுமதித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விவாதத்தை தொடங்கி வைத்தார். காங்கி ரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினர். இறுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
தீர்மானம் தோல்வி
இதைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்திற்கு திமுக மற்றும் அதன் தோழமை கட்சி உறுப்பி னர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இந்த விவாதத்தில், பாஜக, பாமக உறுப்பினர்கள் கலந்து கொள்ள வில்லை. இதனால், குரல் வாக்கெடுப்பில் இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.
டிவிஷன் வாக்கெடுப்பு
எனினும், சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் பகுதி (Division) வாரி யாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்த நிலையில், அதை ஏற்று அந்த முறையிலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது எண்ணிக்கை முறையில் வாக்கெடுப்பு ஆகும். அதன்படி மொத்தமுள்ள 6 டிவிஷன் வாரியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக 63 பேரும், எதிராக 154 பேரும் வாக்களித்தனர்.
இதனால், சட்டப்பேரவையில் அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மா னம் தோல்வி அடைந்தது என அறிவிக் கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மு. அப்பாவு மீண்டும் பேரவைத் தலைவர் இருக் கையில் வந்தமர்ந்து, வழக்கம்போல் அவையை வழிநடத்தினார். அப்போது முதலமைச்சர், அமைச்சர்கள், முன்வரிசை கட்சித் தலைவர் கள், திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் தெரி வித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். எதிர்க் கட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் பேரவைத் தலைவருக்கு மரியாதை செலுத்தினர்.