tamilnadu

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கும்பல் பாலியல் வல்லுறவு கொடுமை

புதுதில்லி,நவ.9- தில்லியில் மனநிலை பாதிக்கப் பட்ட பெண் ஒருவர், மிகக் கொடூர மான முறையில் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டி ருப்பதற்கு, ஊனமுற்றோர் உரிமை களுக்கான தேசிய மேடை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய  மேடை யின் செயலாளர் முரளிதரன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தில்லிக் காவல்துறை, குற்றம் புரிந்த கயவர்களைக் கண்டு பிடித்துவிட்டபோதிலும், இந்தக்  கொடூரமான சம்பவம் நிகழ்ந்து  ஒரு மாதம் கழித்த பின்னர்தான் இது தொடர்பான விவரங்கள் வெளிச் சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்த காவல்துறை கொஞ்சம் கூருணர்வு டன் நடந்துகொண்டுள்ள அதே சம யத்தில், இவ்வழக்கை விசாரிப்பதில் அது கையாண்ட முறைகள் சர்ச்சைக் குரியவை மற்றும் சிக்கல் நிறைந்த வையாகும். வழக்கை விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் அவர்களுக்கு இது போன்ற வழக்குகளை விசாரணை செய்வதில் போதுமான அளவிற்கு பயிற்சி இல்லாததையே காட்டு கின்றன. பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணுடைய கல்வித் தகுதிகள், அவர் படித்த கல்வி நிறுவனத்தின் பெயர், பார்த்திடும் வேலை, பணி புரியும் இடம் உட்பட அவருடைய தகவல்களைக் காவல் துறையினர் வெளிப்படுத்தியிருப்பது மிகுந்த கவலையை அளிக்கக்கூடிய வைகளாகும். இவ்வாறு இவர்களு டைய நடவடிக்கை 2023ஆண்டு பாரதிய நியாய சன்ஹிதாவின் 72ஆவது (பழைய இந்தியத் தண்ட னைச் சட்டத்தின் 228-ஏ-1) பிரிவை மீறும் செயலாகும். இப்பிரிவின்படி, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர்கள் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் அடையாளங்களை வெளிப்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனை மீறி, பாதிக்கப்பட்டவர் குறித்து அடையாளங்களை வெளிப் படுத்தும் ஊடகங்கள் அல்லது நபர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் அபராதமும் விதித்திட வேண்டும் என்றும் இச்சட்டப்பிரிவு கூறுகிறது.

மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் செயல்

மேற்படி சட்டத்தின் 72ஆவது பிரிவானது, வழக்கை விசாரித்தி டும் காவல்துறையினர் அல்லது புல னாய்வு அதிகாரிகள், தேவைப் பட்டால் புலன் விசாரணை நோக்கத் திற்காக,  நல்லெண்ணத்தின் அடிப்ப டையில் வேண்டுமானால் அது போன்ற விவரங்களை வெளிப்படுத்த முடியும்.  எனினும் பாதிக்கப்பட்டவ ருடைய பணியிடம், கல்வித்தகுதி மற்றும் இருப்பிடம் போன்றவை சம் பந்தமாக வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு வெளி யிடுவது என்பது, சட்டம் அளித் துள்ள பாதுகாப்பு அம்சங்களை மீறும் செயலாகும் என்பது மட்டு மல்ல, மேலும் சமூகரீதியான பாதிப்பு களை ஏற்படுத்தக்கூடும்.

காவல்துறையின்  முழுத் தோல்வி

பாதிக்கப்பட்டவரின் குடும் பத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாகக் காத்திருந்து விட்டு, தங்கள் பெண்ணைக் காண வில்லை என்று முறையீடு தாக்கல் செய்திருக்கிறார்கள். அவரைக் கண்டுபிடித்திட காவல்துறையினர் முழுமையாகத் தோல்வி அடைந்துள் ளனர். குற்றம் நடந்து நான்கு மாதங்கள் கழிந்தபின்னர்தான் குற்றஞ்செய்த நபர்களை காவல் துறையினர் கண்டுபிடித்திருக்கி றார்கள். சற்றே விழிப்புடன் அவர்கள் செயல்பட்டிருந்தார்களானால் இத்தாமதத்தைத் தவிர்த்திருக்க முடியும். நாடு முழுதும் இதுபோன்று ஊன முற்ற பெண்கள் உட்பட  பெண்களு க்கு எதிராகப் பாலியல் துன்புறுத்தல் கள் அதிகரித்துக்  கொண்டிருக்கும் பின்னணியில் இந்த நிகழ்வுக்கு அதிக அழுத்தம் தர வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. (ந.நி.)