மதுரை, பிப்.29- தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தில் கள் இறக்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளி நாட்டு மதுபானங்களின் விற்பனையை பெருக்குவதற்காகவே கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கள் இறக்கவும், விற்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, இதுதொடர்பாக தமி ழக உள்துறை செயலர் பதிலளிக்க உத்தர விட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.