மரபுகளை மதிக்காத ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் சென்னை, ஜன. 20 - தமிழ்நாடு சட்டப்பேரவையின் மரபு களை மதிக்காத ஆளுநர் ஆர்.என். ரவி. தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக் கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஆண்டின் துவக்கத்தில் ஆளுநர் உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்குவது வழக்கம். ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி, உரையை படிக்காமலும், வழக்கம்போல் தேசிய கீதம் முதலில் பாட வேண்டும் என்று பிரச்சனையை எழுப்பியும் வெளியேறியுள்ளார். ஆளுந ரின் இந்த செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. விதிக்கப்பட்ட கடமையை ஆளுநர் நிறைவேற்ற வேண்டும் அவையின் மரபுகளை மதித்து நடந்து கொள்வதுதான் ஆளுநருக்கு அழகே தவிர, அவையை அவமதிப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். அமைச்சரவை தயாரித்து கொடுக்கும் உரையை படிப்பதுதான் ஆளுநருக்கு விதிக்கப்பட்டுள்ள கடமை. ஆனால், வழங்கப்பட்ட உரையை குறைசொல்லி, படிக்க மாட்டேன் என்று சொல்வதற்கு அவ ருக்கு உரிமையில்லை. எனவே, அரசியலமைப்புக் கடமையை வேண்டுமென்றே நிறைவேற்றாமல், தொடர்ந்து மாநில அரசுடன் ஒரு மோதல் போக்கைக் கடைபிடிக்கும் ஆளுநர் ராஜி னாமா செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.
ஆளுநர் உரையில் இடம்பெற்றதும் இடம்பெறாத அம்சங்களும்!
சென்னை, ஜன. 20 - தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன் வைக்கப்பட்ட ஆளுநர் உரை, பொது வாக வரவேற்கத்தக்கதாக இருந்தா லும், முக்கியமான பல்வேறு வாக்குறுதிகள் குறித்து, உரையில் எந்த அறிவிப்பும் இல்லாதது குறித்து தமது கவலையை வெளிப்படுத்தி யுள்ளது. இதுதொடர்பாக மாநிலச் செயலாளர் பெ. சண் முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்ப தாவது: சாதனை அம்சங்கள் இடம்பெற்ற உரை ஆளுநர் வாசிப்பதற்கென்று தயாரிக்கப்பட்ட உரையில், தமிழ்நாடு அரசு இதுவரை நிறைவேற்றி யுள்ள பல்வேறு வாக்குறுதிகள், சமூகநலத் திட்டங்கள், மாநில அரசின் சாதனைகள், மனைப் பட்டா வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஆசிரி யர் - அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட் டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காதது, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்காமல் முட்டுக்கட்டை போடுவது, மாநில உரி மைகளைப் பறிப்பது என ஒன்றிய பாஜக அரசின் தமிழகத்திற்கு விரோதமான செயல்பாடு கள் அழுத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளன. எதிர்காலத் திட்டங்கள் குறித்து இல்லாதது ஏமாற்றம்! அதேநேரத்தில், எதிர்காலத்தில் செய்ய இருக்கும் திட்டங்கள் குறித்து எதுவுமே குறிப்பிடா தது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். ஆசிரி யர் பணியிடங்களை நிரப்புவது, அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், போக்குவரத்து, மின்சார வாரிய ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை உயர்த்து வது, உள்ளாட்சி ஊழியர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, சாலைப் பணியாளர்களின் 41 மாத கால பணித் தொடர்ச்சியை வரன்முறை செய்வது, மக்கள் நலப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது போன்ற அம்சங்கள் குறித்து ஆளுநர் உரை குறிப்பில் இடம் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் வேண்டும்! பல்வேறு துறையில் உள்ள தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுபவர்களையும் மற்றும் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்களையும் நிரந்த ரம் செய்திட வேண்டும். வேலையின்மை அதிகரித்து வரும் சூழலில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளையும் வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.