துமையான சிந்தனை
முதலமைச்சர் வருகிறார் என்றவுடன் அரசு எந்தி ரம் வழக்கம்போல தயாரிப்பில் இறங்கியது. பள்ளிக்கூடக் குழந்தைகள் வரவழைக்கப்பட்டனர். ஏராளமான பூங்கொத்துகள் வாங்கப்பட்டிருந்தன. அந்தப் பூங்கொத்துகளை ஏந்தியவாறு முதல்வரிடம் கொடுப்பது போன்று சில அதிகாரிகள் பயிற்சி எடுத்தனர். ‘இதையெல்லாம் எதிர்பார்க்கும் முதல்வர் அல்ல’ என்று சிலர் சொன்னதையும் அவர்கள் கேட்க வில்லை. பத்து மணிக்கு நிகழ்வு என்று சொல்லப்பட்டி ருந்தது. எப்படியும் 11.30 வரையில் ஆகி விடும் என்ப தில் அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். சிலர் வீட்டி லிருந்து கிளம்பவே இல்லை. பலரின் வாக்கிடாக்கி கள் திடீரென்று பரபரத்தன. ‘நிகழ்வு நடக்கும் இடத்திற்கு இன்னும் பத்து நிமிடங்களில் முதல்வர் வந்து விடுவார்’ என்று அறிவித்தன. அப்போது 9.45தான் ஆகி யிருந்தது. ‘இவரென்ன... முதல்வரா இல்லையா’ என்று புலம்பிக்கொண்டே வந்து சேர்ந்தனர். 9.55க்கு முதல்வர் புத்ததேவ் வந்திறங்கினார். பூங்கொத்துகளைக் கொடுத்தபோது புத்ததேவின் முகத்தில் பெரிய மாறு தல்கள் இல்லை. வரிசையில் இருந்த அதிகாரி ஒருவர் சிறிய பூ ஒன்றைக் கையில் வைத்திருந்தார். அருகில் சென்ற முதல்வர், “இதென்ன வித்தியாசமா இருக்கே” என்று கேட்டார். அந்த அதிகாரியோ, “ஆமா.. ஒரு வருஷத்துக்கு இந்தப் பூ வாடாது” என்றார். “அப்படியா..” என்று கேட்ட முதல்வர் முகத்தில் மலர்ச்சி. தனது அலுவலக அதிகாரியொருவரை அழைத்தார். “இந்தப் பூவை ஏற்றுமதி செய்யுறதுக்கு என்ன வாய்ப்புனு பாருங்க” என்று சொல்லிவிட்டு நகர்ந் தார்
