tamilnadu

துக்கோட்டை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும்

துக்கோட்டை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும்

\புதுக்கோட்டை, மார்ச் 15-  2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை, தமிழக சட்டசபையில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.  குறிப்பாக, அரசு காலிப் பணியிடங்கள், 12 லட்சம் இருந்தும் 40,000 காலி பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்ற அறிவிப்பும், 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளில் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும் என்பதும், விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களில் குடும்பத் தலைவர் இறந்தால் ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்படும் என்பதும், ஏழை குடும்பத்தில் ஒருவர் இறந்தால் ஈமச்சடங்கு உதவியாக ரூ.2500 இல் இருந்து 10,000 ஆக உயர்த்தி அறிவித்தது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வரவேற்கிறது.  அதே நேரம், நிலமற்ற ஏழைகளுக்கு தமிழ்நாட்டில் 50 லட்சம் அரசு மற்றும் தரிசு நிலங்களை கையகப்படுத்தி வழங்குவோம் என்ற கலைஞரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு நிறைவேற்றப்படாதது ஏமாற்றமே அளிக்கிறது. மேலும், விவசாய தொழிலாளர்களுக்கு சட்ட கூலியை உயர்த்தி அறிவிக்கவில்லை. தமிழகத்தில் வாழும் ஐந்து லட்சம் ஏழை மக்களுக்கு குடிமனை பட்டா வழங்குவோம் என்ற திட்டத்தை ஒரு தனி சட்டமாக மாற்றி, போர்க்கால அடிப்படையில் வீடற்ற மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கி வீடு கட்டிக் கொடுப்போம் என்கின்ற அறிவிப்பு இல்லை.  ஒரு கோடி விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் உறுப்பினராக உள்ள உழவர் பாதுகாப்பு திட்டம் என்பதை மாற்றி விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்களின் நலவாரியச் சட்டம் நிலைநிறுத்தப்படும் என்ற அறிவிப்பு இல்லை.  இதனால், கிராமப்புற ஏழை விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி மருத்துவம் வேலைவாய்ப்பு அதை உட்படுத்திய கோலப்பன் ஐஏஎஸ் குழுவின் 43 பரிந்துரைகளின் அம்சங்களும் நிறைவேற்றப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்தின் நிரந்தர நீர் பாசனத்தையும், நீர் மேலாண்மை மற்றும் விவசாயத்தை பாதுகாக்கும் திட்டமான *காவிரி வைகை குண்டாறு* இணைப்பு திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்காதது ஏமாற்றமளிக்கிறது.. ஒட்டுமொத்தமாக, தமிழக அரசின் இந்த நிதிநிலை அறிக்கை, கல்வி மருத்துவ கட்டமைப்பு என பல நல்ல வரவேற்புத் திட்டங்களைக் கொண்டு இருந்தாலும் தமிழக மக்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள வறுமை ஒழிப்பு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய பென்ஷன் திட்டம்,  மாற்றுத் திறனாளிகளுக்கான கூடுதல் உதவித்தொகையை அறிவிக்காதது விமர்சனத்திற்குரியது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டை மாவட்டக் குழுசார்பில் சுட்டிக்காட்டப்படுகிறது.

தவணை தொகை பெற வேளாண் அடுக்கக அடையாள எண் அவசியம்
ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ரூ.6,000 ஆண்டுக்கு நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தற்பொழுது ஒன்றிய அரசால் வேளாண் அடுக்ககத்தின் கீழ், விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் மூலம், தனிப்பட்ட அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு  பி.எம். கிசான் திட்டத்தின் 20 ஆவது தவணை வழங்கப்படுவது நிறுத்தப்படும்.  பெரம்பலூர் மாவட்டத்தில் 53,996 விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் இணைந்து உள்ளனர். இவர்களில் 28,479 விவசாயிகள் மட்டுமே வேளாண் அடுக்கக தனிப்பட்ட அடையாள எண்ணை பெற்றுள்ளனர். மீதமுள்ள 25,517 விவசாயிகள் வேளாண் அடுக்கக தனி அடையாள எண் பெறாமல் உள்ளனர்.  இவர்கள் 31.03.2025-ஆம் தேதிக்குள் அடையாள எண்ணை பெற்றால் மட்டுமே  பி.எம்.கிசான் மற்றும் பயிர் காப்பீடு திட்டப் பலன்கள் கிடைக்கப் பெறும். எனவே, இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள், அருகில் உள்ள பொதுசேவை மையத்தை அணுகி, இலவசமாக இந்த அடையாள எண்ணை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  ஆதார் அட்டை, ஆதார் அட்டை எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண், சிட்டாவுடன் பொதுசேவை மையத்தை அணுகி அடையாள எண்ணை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.