ரஷ்யாவின் சொத்துக்களை திருடும் ஐரோப்பிய ஒன்றியம்
பிரஸ்ஸல்ஸ், டிச. 13- ஐரோப்பிய ஒன்றியக் கவுன்சில், ரஷ்யாவின் மத்திய வங்கிக்குச் சொந்தமான சொத்துக்களை முடக்கி வைத்துள்ளது. தற்போது இந்த முடக் கப்பட்ட சொத்துக்களை ரஷ்யாவுக்குத் திருப்பி அனுப்புவதற்கு தடை விதித்துள்ளது. இந்த நட வடிக்கையானது ரஷ்யச் சொத்துக்களை திருடும் நடவடிக்கை என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 2022 இல் உக்ரைன்-ரஷ்ய போர் தொ டங்கிய பிறகு ரஷ்யா மீது பொருளாதாரத் தடை கள் விதித்த ஐரோப்பிய ஒன்றியம் சுமார் 2,470 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ரஷ்யத் சொத்துக்களை முடக்கியது. 2025 அக்டோபர் மாதம் நடந்த ஐரோப்பிய கவுன்சில் கூட்டத்தில் ரஷ்ய சொத்துக்களை முடக் கத்திலேயே வைத்திருக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உறுதியளித்தனர். தற்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு முன் ரஷ்ய சொத்துக்கள் மீதான தடைகளை நீட்டிக்க ஒவ் வொரு ஆறு மாதங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றி யத்தின் 27 உறுப்பு நாடுகளின் ஒருமித்த ஒப்புதல் தேவைப்பட்டது. இந்த தடை நீட்டிப்புக்கும், ரஷ்ய சொத்துக்க ளை திருடி ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரை னுக்கு கொடுப்பதையும் ஹங்கேரி மற்றும் ஸ்லோ வாக்கியா போன்ற ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து எதிர்த்து வந்தன. இனிமேல் இந்தத் தடைகளை நீட்டிப்பதில் அந்நாடுகளின் எதிர்ப்பு பெரிய தடைகளாக இருக்காது என கூறப்படுகிறது. சமீப ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகள் பொ ருளாதாரம், பண வீக்கம், வேலையின்மை, விலை வாசி உயர்வு என கடும் நெருக்கடியில் உள்ளது. எனினும் அந்நாடுகள் மக்கள் நல் வாழ்வுக்கு தேவையான கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதா ரம் ஆகியவற்றில் முதலீடு செய்யாமல் உள்ளன. அதே நேரத்தில் நேட்டோ உறுப்பினராக உள்ள ஐரோப்பிய நாடுகள் தங்கள் உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5 சதவிகிதம் வரை ராணு வத்திற்காக செலவு செய்ய முடிவெடுத்துள்ளன. மேலும் உக்ரைன்-ரஷ்யா போரில் உக்ரைனுக்கு உதவுவதற்காக பல கோடி ரூபாய்க்கு அமெ ரிக்காவிடம் ஆயுதங்கள் வாங்கி கொடுத்து வரு கின்றன. இத்தகைய நடவடிக்கைகள் ஐரோப்பிய பொருளாதாரத்தை மோசமான சூழலுக்கு தள்ளி வருகிறது. இந்தச் சூழலின் பின்னணியில் தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்த அவசரமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடவடிக்கை, ரஷ்யாவின் மத்திய வங்கியின் சொத்துக்கள் அல்லது கையிருப்பு களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மாற்றுவதைத் தடை செய்கிறது. மேலும், “ரஷ்ய மத்திய வங்கியின் சார்பாக அல்லது அதன் வழிகாட்டுதலின்படி செயல்படும் எந்தவொரு சட்ட நிறுவனம், அமைப்பு அல்லது குழுவுடனான” நிதிப் பரிவர்த்தனைகளுக்கும் இது பொருந்தும். தற்போது ஐரோப்பியா முடக்கியுள்ள இந்த சொத்துக்களை பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க உள்ளன.
