tamilnadu

img

நாடு வளர்கிறது, ஆனால் மக்களின் வயிறு நிறையவில்லை: இது வளர்ச்சியா, அவமானமா? - முனைவர் மு.சிவதாசன்,எம்.பி..

நாடு  வளர்கிறது,  ஆனால்  மக்களின்  வயிறு  நிறையவில்லை:  இது வளர்ச்சியா, அவமானமா?

இந்தத் தேசம் வளர்ந்து வருவதாகவும், உலகின் நான்காவது பெரிய பொரு ளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளதா கவும் பிரதமர் பெருமிதம் கொள்கிறார். ஆனால், இந்த வளர்ச்சி யாருக்கானது? புள்ளி விவரங்களின்படி பார்த்தால், இந்தியாவில் இன்று ‘அ’ மற்றும் ‘அ’ (அதானி மற்றும் அம்பானி) ஆகிய இரண்டு பெயர்கள்தான் வளர்ந்து கொண்டி ருக்கின்றனவே தவிர, அடித்தட்டு மக்களின் வாழ்க்கை வளரவில்லை. ரூ. 65 மதிப்பூதியத்தில் ஒரு வளர்ச்சி? நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பில் முதுகெலும் பாக விளங்கும் ‘ஆஷா’ (ASHA) ஊழியர்கள் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த எட்டு ஆண்டுகளாக அவர்களின் மதிப்பூதியம் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை. ஒரு நாளை க்கு வெறும் 65 ரூபாய் மதிப்பூதியத்தில் அவர்கள் வேலை செய்கிறார்கள். இது வளர்ச்சியா? அல்லது இந்தத் தேசத்திற்கு இழைக்கப்படும் அவமானமா? கேரளாவில் போராட்டக் களத்திற்கு வந்த ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி, அவர்க ளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், இந்த பட்ஜெட்டில் ஆஷா ஊழியர்கள் முழுமையாகப் புறக்கணிக்கப் பட்டுள்ளனர். மக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை இந்த அரசு உணர வேண்டும். சுரண்டப்படும் உழைப்பு: அங்கன்வாடி முதல் மதிய உணவு வரை அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்களுக்கு முறையே மாதம் ரூ. 2,700 மற்றும் ரூ. 1,350 மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளாக இதே நிலைதான். மதிய உணவுத் திட்டத்தை முன்னெடுக்கும் அமைப்பா ளர்களுக்கு மாதம் வெறும் 1,000 ரூபாய் மட்டுமே ஊதியம். ஒரு மனிதன் மாதம் ஆயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு இந்த விலைவாசி உயர்வில் எப்படி வாழ முடியும்? எந்த ஒரு நாகரிக சமூகமும் இதைக் கண்டு வெட்கித் தலைகுனிய வேண்டும். வஞ்சிக்கப்படும்  மூத்த குடிமக்களும் பெண்களும் ‘நாரி சக்தி’ (பெண் சக்தி) என்று மேடைதோறும் முழங்கும் இந்த அரசு, கைம்பெண்களுக்கு கடந்த 14 ஆண்டுகளாக மாதம் வெறும் 300 ரூபாய் மட்டுமே ஓய்வூதியம் வழங்கி வருகிறது. நாட்டின் தாய்மார்களுக்கு முறையான ஓய்வூதி யம் வழங்காமல் ‘வந்தே மாதரம்’ பாடுவதில் என்ன பொருள் இருக்க முடியும்? அதேபோல, மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியம் கடந்த 20 ஆண்டுகளாக ‘200 ரூபாய்’ என்ற அளவி லேயே உறைந்து போயுள்ளது. மாற்றுத்திற னாளிகளுக்கும் அதே 300 ரூபாய்தான். இதுதான் நீங்கள் சொல்லும் ‘சப்கா விகாஸ்’ (அனைவருக்குமான வளர்ச்சி) மாடலா? வேலையில்லாத் திண்டாட்டமும், மூடப்படும் பள்ளிகளும் வேலைவாய்ப்புகள் பெருகவில்லை, மாறாகக் குறைக்கப்பட்டுள்ளன. அரசுத் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் ஒழிக்கப் பட்டுள்ளன. ரயில்வேயில் 2.5 லட்சம் பதவிகள் காலியாக உள்ளன. கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வெறும் 0.35 சதவீதம் மட்டுமே. நரேந்திர மோடி அரசின் ஆட்சியில் இதுவரை 89,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பி.எட்., எம்.எட். மற்றும் பி.எச்.டி. முடித்த இளை ஞர்கள் வேலை தேடி அலைகிறார்கள். ஆனால், ஒரு கல்வி நிறுவனம் தொடங்குவதற்கு முன்பே அதற்கு ‘சிறந்த நிறுவனம்’ (Institute of Emin ence) என்ற அந்தஸ்து வழங்கப்படுகிறது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்பது நாட றிந்த ரகசியம். கேரளா மீதான நிதித் தாக்குதல் நான் கேரளாவைச் சேர்ந்தவன் என்பதால், எங்கள் மாநிலத்திற்கு இழைக்கப்படும் துரோ கத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். 11-ஆவது நிதி ஆணையத்தில் 3.06 சதவீதமாக இருந்த கேரளாவிற்கான நிதிப் பங்கீடு, இப்போது 2.38 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் (AIIMS): கேரளாவின் நீண்டகாலக் கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே: புதிய ரயில் சேவைகள் இல்லை. உள்கட்டமைப்புக்கு நிதி இல்லை.ஆமைப் பாதைகள்: ‘ஆத்மநிர்பர்’ (தன்னம்பிக்கை) என்று கூறிக்கொண்டு, கேரளாவிற்குப் பயனுள்ள திட்டங்களுக்குப் பதிலாக‘ஆமைப் பாதைகள் திட்டத்தையே’ (Tortoise paths) இந்த அரசு வழங்கியுள்ளது. வட்டிக்கே 20 சதவீதம் ஒன்றிய அரசின் கடன் ரூ. 200 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. பட்ஜெட்டில் 20 சதவீதம் இந்தக் கடனுக்கான வட்டியைச் செலுத்தவே செலவிடப்படுகிறது. இந்த அரசு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்; மக்கள் ஒன்றுபட்டால் எப்போதும் வெற்றி பெறுவார்கள். உழைக்கும் வர்க்கத்தின் குரலை இந்த பட்ஜெட் நசுக்கப் பார்த்தால், அந்த மக்கள் வீதிக்கு வந்து தங்களின் உரிமைகளை வென்றெடுப்பார்கள்! (மாநிலங்களவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் ஆற்றிய உரையின் பகுதிகள்)