மகிழ்ச்சி நிறைந்த இடமாக வகுப்பறை இருக்க வேண்டும்
அவிநாசி அருகே அம்மாபா ளையத்தில் உள்ள தனியார் பள் ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி உப குழு மாநில மாநாடு நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் கல்வி யாளர்கள் தங்கள் கருத்துக்க ளைப் பகிர்ந்து கொண்டனர். இதில், ‘வகுப்பறை ஜனநா யகம்’ என்ற தலைப்பில் அமைப் பின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணி கருத் துரை ஆற்றினார். அவர் பேசு கையில், உண்மையான ஜனநாய கம் என்பது ஆபிரகாம் லிங்கன் கூறியது போல ‘மக்களே மக்க ளுக்காக நடத்தும் ஆட்சி’ என் பதை வகுப்பறையிலும் பொருத்த வேண்டும். இங்கிலாந்தில் 100 முதலாளிக ளால் உருவாக்கப்பட்ட கல்விமு றையே இந்தியாவில் சுதந்திரம் அடைந்த பின்பும், 90% நடைமு றையில் இருப்பது போலி ஜன நாயகம். உண்மையான ஜனநாய கம் என்பது சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக பெண்கள், குழந்தை கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ரிய உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்வதே ஜனநாயகம். வகுப்பறையில் ஆசிரியர்கள் அதிகாரப் பகிர்வுடன் மாணவர் களுடன் உரையாட வேண்டும். மாணவர்களுக்கும் உடல் உபா தைகளுக்கு கழிப்பறை செல்ல போன்ற அடிப்படை உரிமைக ளில் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். வகுப்பறை என்பது மகிழ்ச்சி நிறைந்த இடமாக இருக்க வேண்டும். விற்பவரும் வாங்குபவரும் சந்திக்கும் சந்தை போல, கற்பிப்ப வரும் கற்பவரும் அறிவை வளர்க்கவும், திறனை மேம்படுத் தவும், ஆளுமையை உருவாக்க வும் சந்திக்கும் இடமே வகுப் பறை. இதுதான் உண்மை யான ஜனநாயகம். இது சமூக மாற்றத்திற்கும், வாழ்வாதாரத்திற் கும் வழிகாட்ட வேண்டும் என்று கார்ல் மார்க்ஸ் வகுத்த ஜனநா யக வகுப்பறையை சுட்டிக்காட் டினார். அறிவியல் இயக்கத்தின் கல்விப் பணிகள் மற்றும் இலக்குகள்: அமைப்பின் மாநிலச் செயலா ளர் பாலகிருஷ்ணன், ‘அறிவியல் இயக்கத்தில் கல்விப் பணிகள்’ குறித்து உரையாற்றினார். 1981-ல் துவங்கிய அறிவியல் இயக்கம், 1986 முதல் கலைப் பயணங்கள் மூலம் கல்விக்கான பிரச்சாரங் களை மேற்கொண்டது. 1991 முதல் 95 வரை முழு எழுத்தறி வுத் திட்டம், அதைத் தொடர்ந்து தொடர் அறிவொளித் திட்டம் ஆகியவற்றில் முக்கியப் பங்காற் றியது. டிராப் அவுட்(பள்ளி விலகல்) ஆன குழந்தைகளை ஆறே மாதத்தில் கல்வி கற்க வைத்த அனுபவத்தையும், கல்வி உரி மைச் சட்டம் உருவாக்கப்பட் டதில் அறிவொளி இயக்கம் திருத்தங்களைக் கொண்டு சென்றது. செயல்வழி கல்வித் திட்டத்தை உருவாக்குவதிலும், தமிழ், அறிவியல், கணிதப் பாடங்களை எளிமைப்படுத்து வதிலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னோடியாக இருந் தது. தேசிய கல்விக் கொள்கை ஒரு பெரும் ஆபத்து என்றும், சமச்சீர் கல்வித் திட்டத்தின் சிறப்பை நீதிமன்றத்தில் நிரூ பித்ததில் அறிவியல் இயக்கத் தின் பங்கு முக்கியமானது என் றும் அவர் தெரிவித்தார். வருங் காலத்தில் கல்வி குறித்து தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தை ஆலோசனை கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ளதை பெருமையுடன் தெரி வித்தார். தமிழகத்தின் தனித்து வமான கல்விக் கொள்கையை சட்டமாக்க தொடர்ந்து வலியு றுத்தி வருவதாகவும், வகுப்பறை களில் கணிதம் மற்றும் அறிவி யலை செயல்விளக்கத்துடன் கற்பிப்பதில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மாநாட்டின் துவக்கத்தில் அமைப்பின் மாநிலத் தலைவர் முனைவர் திருநாவுக்கரசு ஆற் றிய தலைமை உரையில், வேத காலக் கல்வி முறையில் பெண் கள் கல்வி பெறுவதில் தடை இருந்தது; அது உயர் வகுப்புப் பெண்களுக்கு மட்டுமே சாத்தி யமானது. கல்வி எப்போதும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கல்வியாக இருக்க வேண்டும் என்றார். தொடர்ந்து, ‘தேசிய கல்விக் கொள்கை ஏற்படுத்திய தாக்கங் கள்’ மற்றும் ‘சிக்கலில் உயர் கல்வி’ ஆகிய தலைப்புகளிலும் கருத்தரங்கங்கள் நடைபெற்றன. ‘வகை வகையாய் வாசிப்போம்’ என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் தேனி சுந்தர் உரையாற்றினார். வான வில் மன்ற செயல்பாடுகள், சமூக அறிவியல் திருவிழா குறித்தும் விளக்கங்கள் அளிக் கப்பட்டன. மாவட்ட இணைச் செயலாளர் சண்முகராஜா தலை மையில் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நிறைவு நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மின் னல் புக் டிரஸ்டி நிர்வாகி கன கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். தொகுப்பு – அருண்