டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் முதலமைச்சர் தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும்!
சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) வலியுறுத்தல்!!
சென்னை, பிப். 4 - டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக் கைகள் மீது முதலமைச்சர் தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல். திருமா வளவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) லிபரேசன் மாநிலச் செய லாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை வரு மாறு: பாதுகாப்பற்ற பணிச்சூழலில் டாஸ்மாக் ஊழியர்கள்! தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மூலம் மதுபா னங்களை சில்லறை முறையில் விற் பனை செய்து வருகின்றது. கடந்த 23 ஆண்டுகளாக மதுபானங்கள் விற்பனை ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து, அர சின் வரி வருமானத்திற்கு மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு பங்களிப்பை செலுத்தி வருகிறது. ஆனால், பாதுகாப்பற்ற பணிச் சூழலில் டாஸ்மாக் ஊழியர்கள் பணிபுரிந்து வரும் அவல நிலை தொடர்கிறது. அலட்சியப்படுத்திய அதிமுக அரசு! கடந்த அஇஅதிமுக கால ஆட்சி யில் டாஸ்மாக் ஊழியர்கள் அலட்சியப் படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களது பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. புதிய அரசு அக்கோரிக்கைகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்த னர். ஆனால் நிறைவேற்றப்பட வில்லை. அதனால், தற்பொழுது டாஸ் மாக் ஊழியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். ஊழியர்களை எதிர்மறையுடன் அணுக வேண்டாம்! போராடும் டாஸ்மாக் ஊழியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு ஊழியர்களையும் அரசுக்கு எதிரானவர்கள் எனக் கருதி எதிர்மறையாக அணுகக் கூடாது என தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்வ தோடு, போராடும் டாஸ்மாக் ஊழி யர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு ஊழியர்களின் கோரிக்கைகள் மீது முதலமைச்சர் அவர்கள் நேரடியாகத் தலையிட்டு, சுமூகத் தீர்வு காண முன் வர வேண்டும் என சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.