கந்தர்வன் கதை சொல்லுதல் போட்டி முடிவுகள் அறிவிப்பு
புதுக்கோட்டை, பிப்.4 - கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற கந்தர்வனின் கதை சொல்லுதல் போட்டி முடிவுகள் அறி விக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போட்டி ஒருங்கி ணைப்பாளர் பேரா.சா.விஸ்வநாதன் தெரிவிக்கையில், “தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் சார்பில் புதுக்கோட்டை நகர் மன்றத்தில் பிப்.7 அன்று கலை இரவு நடைபெறுகிறது. கலை இரவு நிகழ்வை யொட்டி கல்லூரி மாணவர்களுக்கான கந்தர்வன் கதை சொல்லுதல் போட்டி புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி யில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. போட்டியை கல்லூரி முதல்வர் முனைவர் நிர்மலா தொடங்கி வைத்தார். கவிஞர் மு.பாலசுப்பிரமணியன், சுதந்திரராஜன், கவிஞர் நிலவை பழனியப்பன், கவிஞர் பீர்முகமது ஆகியோர் கந்தர்வன் சிறுகதைகள் பற்றி அறிமுக உரையாற்றினர். போட்டியை வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன், கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் முத்தமிழ், தேன்மொழி ஆகியோர் ஒருங்கிணைத் தனர். கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி மாணவி வீ.ஜெயலட்சுமி முதல் பரிசையும், சா.சஸ்ரீனா பிர்தவுஸ் 2 ஆம் பரிசையும், புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர் ம.முகிலரசன் 3 ஆம் பரிசையும் பெற்றனர். ஆறுதல் பரிசுகளாக அறந்தாங்கி நைனா முக மது கல்லூரி மாணவி கு.முத்துபாவனா, அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவி ரா.ஸ்ரீராஜமதி, புதுக் கோட்டை மன்னர் கல்லூரி மாணவி பா. ஸ்ருதிகா, கைகுறிச்சி ஸ்ரீபாரதி கல்லூரி மாணவி சி.சினேகா, அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் யா. அப்ரின் ஆகியோர் பெற்றனர். போட்டியில் வென்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2 ஆம் பரி சாக ரூ.3 ஆயிரம், 3 ஆம் பரிசாக ரூ.2 ஆயிரமும், ஆறுதல் பரிசுகளுக்கு ரூபாய் ஆயிரமும் அறிவிக்கப்பட்டு உள்ளது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை, நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் பிப்ரவரி 7 அன்று புதுக் கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறும் கலை இரவில் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்படும்” என்றார்.
