tamilnadu

img

தனியார் கல்லூரி மாணவர்கள் 614 பேருக்கு மடிக்கணினி வழங்கல்

தனியார் கல்லூரி மாணவர்கள்  614 பேருக்கு மடிக்கணினி வழங்கல்

தஞ்சாவூர், பிப்.4-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், செவ்வாய்க் கிழமை, பேராவூரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 7 தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தஞ்சாவூர் மண்டலம், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் ஏ.குணசேகரன் தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்து மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்திப் பேசினர். திமுக தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் டி. பழனிவேல், மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் மற்றும் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  இதில், ஆவணம் டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரி, பட்டுக்கோட்டை மீனாட்சி சந்திரசேகரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆவணம் டாக்டர் கலாம் பார்மஸி கல்லூரி, ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பட்டுக்கோட்டை மனோரா பாலிடெக்னிக் கல்லூரி, பேராவூரணி வெங்கடேஷ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பட்டுக்கோட்டை கோ-ஆப் ஐடிஐ உள்ளிட்ட 7 கல்லூரிகளைச் சேர்ந்த, 614 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.  முன்னதாக கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் சி.ராணி வரவேற்றார். பேராசியர் நா.பழனிவேலு நன்றி கூறினார்.