தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மெலட்டூர் மெயின் சாலையில், மெலட்டூர் வருவாய் ஆய்வர் அலுவலக கட்டடம் பயன்பாடின்றி, பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. கட்டடம் பழுதடைந்ததால், வருவாய் ஆய்வர் அலுவலகம், புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், பழைய கட்டடம் பயன்பாடின்றி உள்ளது. கட்டடத்தின் மேற்பரப்பில் செடிகள், கொடிகள் வளர்ந்து, விஷ ஜந்துக்கள் வசிக்கக் கூடிய நிலையில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி பழுதடைந்த, பயனற்ற கட்டடத்தை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
