tamilnadu

img

கல்வித் துறையில் சிறந்த ஆசிரியர் பட்டுக்கோட்டை ஆசிரியைக்கு விருது

கல்வித் துறையில் சிறந்த ஆசிரியர் பட்டுக்கோட்டை ஆசிரியைக்கு விருது

தஞ்சாவூர், பிப்.4-  கோயம்புத்தூர் ஏ.ஜெ.கே கல்லூரியில் அண்மையில், “National Level Excellent Educator Award-2026” விருதளிப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில், தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர், நல்லாசிரியர் சு.சத்யா வுக்கு பல்வேறு தரப்பட்ட மாணவர்களை வெவ்வேறு வகையில், அவர்களுக்கு ஏற்றார்  போல், அறிவியல் சிந்தனைகளை வளர்ப்பதிலும், அறிவியல் சார்ந்த போட்டி களில் கலந்து கொள்வதிலும், மாவட்டம்,  மாநிலம் சார்ந்த பல்வேறு அறிவியல் கருத்த ரங்கங்கள், ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித் தல் ஆகியவற்றில் மாணவர்களது தனித் திற மைகளை வெளிக்கொணர்ந்தமைக்காக “Monitoring & Students Support Award” என்ற பிரிவின்கீழ், தற்போதைய இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணனால் விருது  மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப் பட்டது.  இதனை மாவட்ட முதன்மை கல்வி அலு வலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், இடை நிலை மற்றும் தொடக்கக் கல்வி, பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் பள்ளி ஆசிரிய  பெருமக்கள் பாராட்டினர்.