சென்னை, ஜன. 9 - தமிழர் திருநாள் எனப் படும் பொங்கல் திருநாள் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண் டாடப்படும் பண்டிகை யாகும். பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் குடு ம்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. அதன்படி சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம் சைதாப்பேட்டை, சின்ன மலையில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல் திட்டம் மற்றும் இலவச வேட்டி - சேலை வழங்கும் திட்டத்தை முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழனன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர. சக்கர பாணி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப் பினர் தமிழச்சி தங்கபாண்டி யன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.