tamilnadu

img

அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. ஆய்வு

உதகமண்டலம், ஜன. 9 - நீலகிரி மாவட்டம் அரவங்காடு பகுதி யில் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் கார்டைட் வெடி மருந்து தொழிற்சாலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம்  நேரில் பார்வையிட்டார். தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள், தொழிலாளர்களின் நலன்,  பாதுகாப்பு, வனவிலங்குகளின் நடமாட்டம்  ஆகியவற்றை சரிசெய்வது குறித்து  தொழிற்சாலையின் பொது மேலாளர்  மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளு டன் கலந்துரையாடினார். அத்துடன் கார்டைட் தொழிற்சாலையின் கீழ் இயங்கும் பள்ளிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்வின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், நீலகிரி மாவட்டச் செயலாளர் பாஸ்கரன், நீலகிரி சிஐடியு மாவட்டச் செயலாளர் வினோத், வெடி மருந்து தொழிலக ஒருங்கிணைந்த ஊழி யர்கள் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் அசோகன் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.