tamilnadu

முதல்வர் கொண்டாடிய சமத்துவப் பொங்கல்!

முதல்வர் கொண்டாடிய சமத்துவப் பொங்கல்!

தமிழர் திருநாள் எனப்படும் தைத் திருநாளையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று, அனைவருக்கும் பொங்கல் வழங்கியதோடு, பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர். தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் தமிழ்நாட்டின் பண்பாட்டு உடையான வேட்டி - சட்டை அணிந்து விழாவில் பங்கேற்றனர்.