டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதி ராக மதுரையில் மிகப் பெரிய ஊர்வலத்தை நடத்திய மேலூர் பகுதி கிராம மக்கள் 5 ஆயிரம் பேர் காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதி விட்டுள்ளார். அதில், “மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கவிடப்பட்ட ஏலத்தை ரத்து செய்யவேண்டுமென சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது. அதே சமயம், ஜனவரி 7 அன்று நடந்த டங்ஸ்டன் எதிர்ப்பு ஊர் வலத்தில் பங்கேற்ற 5 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிந்திருப்பது கண்டனத் திற்குரியது” என்று குறிப்பிட்டுள் ளார்.