tamilnadu

img

ரயில்வேயின் ‘லோகோ பைலட்’ தேர்வு ரத்து அலட்சியத்தின் உச்சம்!

ரயில்வேயின் ‘லோகோ பைலட்’ தேர்வு ரத்து அலட்சியத்தின் உச்சம்!

ரயில் ஓட்டுநர் பணிக்கான (லோகோ பைலட்)  தேர்வு, கடைசி நேரத்தில் ரத்து  செய்யப்பட்டிருப்பது, அலட்சி யத்தின் உச்சம் என்றும், இது தேர்வு வாரியத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது என்றும் சு. வெங்க டேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மட்டும்  6 ஆயிரம் தேர்வர்கள்

ரயில்வேயில் 18 ஆயிரத்து 799 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு முதல்நிலை  கணினித் (CBT 1) தேர்வு முடிவடைந்து முடிவு கள் வெளியான நிலையில், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 19, 20 தேதிகளில் இரண்டாம் நிலை கணினித் தேர்வு (CBT 2) நடை பெற இருந்தது.  தமிழ்நாட்டில் மட்டும் 6 ஆயிரம் பேர் சிபிடி-2  தேர்வெழுத தகுதிபெற்றிருந்த நிலையில், அவர்கள், 1,500 கி.மீ. பயணம் செய்து, தெலுங் கானா போன்ற மாநிலங்களில் அமைக்கப்பட் டிருந்த தேர்வு மையங்களை புதனன்று காலை  சென்றடைந்தனர். ஆனால், தேர்வு ஒத்திவைக்கப் படுவதாக கடைசிநேரத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு தேர்வர்களை அதிர்ச்சிக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாக்கியது. இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

தேர்வு மையங்களை 1,500 கி.மீ. அப்பால் ஒதுக்கிய ரயில்வே

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் சு. வெங்கடேசன், அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும்  லோகோ பைலட் காலிப் பணியிடங்களுக்கான CBT-2 தேர்வுக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வெ ழுதுவோருக்கு 1500 கிலோமீட்டருக்கு அப்பால் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.  அதை மாற்ற வேண்டுமெனக் கோரி  தொடர்ச்சியான தலையீடுகளை மேற்கொண் டோம். ஆனால் உடனடியாக 6000 தேர்வர் களுக்கு தேர்வு மையங்களை தமிழ்நாட்டில் தேர்வு செய்ய முடியவில்லை என ஒன்றிய அரசின் ரயில்வே பதில் அளித்தது.

கடைசிநேர தேர்வு ரத்தால் தேர்வர்கள் கொந்தளிப்பு

இத்தனை தடைகளையும் மீறி இன்றைய தினம் 1000 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம்  செய்து தமிழ்நாட்டு தேர்வர்கள் தேர்வெழுதச்  சென்றனர். ஆனால், தொழில்நுட்பக் காரணங் களால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக திடீ ரென ரயில்வே தேர்வு வாரியம் அறிவித் துள்ளது.  இந்த அறிவிப்பு தேர்வெழுதச் சென்றவர் களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்து தேர்வெழுத வருவோருக்கான தொழில் நுட்ப ஏற்பாடுகளைக் கூட முன்னெச்சரிக்கை யாக செய்திடாமல் இருப்பது ரயில்வே தேர்வு  வாரிய அலட்சியத்தின் உச்சம். இந்த தொழில் நுட்பக் கோளாறு குறித்து முறையான முழுமை யான விசாரணை நடத்தப்பட வேண்டும்.  

செலவுத் தொகையை  ரயில்வே வழங்க வேண்டும்

வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டிய ஒரு தேர்வு, தேர்வர்களின் குறைந்தபட்ச வாழ்வி யல் தேவையையும் சூறையாடுகிறது. இது  ரயில்வே தேர்வு வாரியத்தின் மீதான நம்பிக் கையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. இதனை ஒரு போதும் ஏற்கமுடியாது. பிற மாநிலங் களுக்கு தேர்வு மையம் வரை சென்று திரும்பிய தேர்வர்கள் செலவு செய்த தொகையை  இழப்பீட்டுத் தொகையாக ரயில்வே வாரியம் வழங்க வேண்டும்.  அத்துடன், இதன் பின்னர் அறிவிக்கப்பட உள்ள தேர்வையாவது தமிழ்நாட்டுத் தேர்வர் களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் அமைத்து நடத்தப்படுவதை ரயில்வே அமைச்ச கமும், ரயில்வே தேர்வு வாரியமும் உறுதிப்படுத்த  வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.