1 கோடி விவசாயத் தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு!
சட்டப்பேரவையில் சிபிஎம் உறுப்பினர் எம். சின்னதுரை பேச்சு
தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவா தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எம். சின்னத்துரை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு முழு மையான தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். “மாநிலத்தில் சுயாட்சி - ஒன்றி யத்தில் கூட்டாட்சி - உள்ளாட்சியில் தன்னாட்சி என்ற கோட்பாட்டை தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்த வேண்டும். அரசியலமைப்புச் சட்டத் தின் பிரிவு 73, 74 திருத்தங்களின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு முழு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்,” என்றார்.
நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும்
மாநில வரி வருவாயில் உள்ளாட்சி களுக்கு தற்போது வழங்கப்படும் 10% நிதி ஒதுக்கீட்டை 30% ஆக உயர்த்த வேண்டும் என்றும், கனிம வளத்துறை மூலம் அரசுக்கு கிடைக்கும் பங்குத் தொகையை நேரடியாக ஊராட்சி மன்றங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உள்ளாட்சித் தேர்தல் கோரிக்கை
27 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த சின்னத்துரை, “தேர்தலை நடத்தாமல் உள்ளாட்சி அமைப்புகளை தொடர்ந்து தனி அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு ஜனநாயக செயல்பாட்டை நாம் வேடிக்கை பார்க்க முடியாது” என்றார்.
குடிமனைப் பட்டா வழங்க வேண்டும்
அரசு நிலங்களில் வாழும் ஏழை - எளிய மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்குவதற்கான நிபுணர் குழு அமைத்து, மறு குடியமர்த்தல் கொள்கையை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
விவசாயத் தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு
ஒன்றிய அரசு 2024-26 காலத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 35 கோடி மனித சக்தி நாட்கள் அளவிற்கு வேலை ஒதுக்கியது. ஆனால் தமிழ்நாட்டிற்கு 12 கோடி மனித சக்தி நாட்கள் மட்டுமே ஒதுக்கியுள்ளதை சின்னத்துரை கடுமையாக சாடினார். “இது தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோடி விவசாயத் தொழிலாளர் களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத் தும். ஒன்றிய அரசு 3,796 கோடி ரூபாயை பாக்கி வைத்திருக்கிறது. அத்தொகையை தமிழ்நாடு அரசு பெற்றுத்தர வேண்டும்,” என்றார்.
முதலமைச்சருக்கு பாராட்டும் - கோரிக்கையும்
பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கிய முதலமைச்ச ருக்கு நன்றி தெரிவித்த சின்னத்துரை, புதிய வீடுகளுக்கான திட்ட மதிப்பீடுகள் சரியாக தயாரிக்கப் படாததால் பயனாளிகள் பாதிக்கப் பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். மற்ற கோரிக்கைகள்* - சட்டமன்ற உறுப்பினர்கள் தலை மையில் ஒன்றிய அளவில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். - ஒரு ஊருக்கு ஒரே சுடுகாடு உரு வாக்கப்பட வேண்டும் (சமத்துவச் சுடுகாடு). - வடக்கலூர் கிராமத்தில் திருமண மண்டபம், கந்தர்வகோட்டையில் வங்கார ஓடைக்குளம், பேருந்து நிலையம், பூங்கா அமைக்க வேண்டும்.
ஊராட்சிகளுக்கான பணி நியமனத் தடை நீக்கப்பட வேண்டும்
ஊராட்சி மன்றங்களில் புதிய நியமனத்திற்கான 10.5.2000 அன்று பிறப்பிக்கப்பட்ட தடை உத்தர வை ரத்து செய்ய வேண்டும் என்றும், தற்போது பணிபுரியும் ஓஎச்டி ஆப ரேட்டர்கள், தூய்மைப் பணி யாளர்கள், டெங்கு கொசு ஒழிப்பு ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்ட ஒருங்கிணைப் பாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.