tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

தமிழகத்தில் ரூ. 500 கோடிக்கு வருமான வரி மோசடி!

சென்னை, மார்ச் 30- தமிழகத்தில் ஒன்றிய - மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களை சேர்ந்த 22 ஆயிரத்து 500 பேர் வரையில், வருமான  வரிக் கணக்கில் மோசடி செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. போலியான ஐடி ரிட்டர்ன் தாக்கல் மற்றும் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, ரூ. 500 கோடிக்கு வருமான வரி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ள தாகவும், இதையடுத்து, பொதுத்துறை, தனியார் ஊழியர்களின் வருமான வரிக்  கணக்கு தாக்கல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.

ரூ. 2 கோடிக்கு ஏலச்சீட்டு மோசடி  பாஜக நிர்வாகி கைது கள்ளக்குறிச்சி

, மார்ச் 30 - கள்ளக்குறிச்சியில் தீபாவளிச் சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 2 கோடிக்கு மேல் பண மோசடி செய்த வழக்கில் தலை மறைவாக இருந்த சூர்யா மகாலட்சுமி - சிவக்குமார் இருவரை யும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கணவன் - மனைவி இருவருமே பாஜக நிர்வாகிகள் ஆவர். சூர்யா  மகாலட்சுமி நகர்மன்ற முன்னாள் தலைவர் ஆவார். சிவக்குமார் பாஜக மாவட்ட தரவு தள மேலாண்மை முன்னாள் துணைத் தலைவர்  ஆவார்.