tamilnadu

img

தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் ஒன்றிய பாஜக அரசு பாரபட்சம்!

தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் ஒன்றிய பாஜக அரசு பாரபட்சம்!

தமிழகத்திற்கு நிதி வழங்கு வதில் ஒன்றிய பாஜக அரசு பார பட்சம் காட்டுவதாக சட்டப்பேரவை யில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக சாடினார். தமிழக அரசின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் மார்ச் 14 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது 4 நாட்கள் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதங் களுக்குப் பதிலளித்து, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமையன்று சட்டப் பேரவையில் உரையாற்றினார். அனைவருக்குமான பட்ஜெட் அப்போது, ஒன்றிய அரசின் நிதிநிலை இந்தியாவின் ஒரு சில  மாநிலங்களுக்கு மட்டுமான நிதி நிலை அறிக்கையாக அமைந் திருப்பதாகவும், குறிப்பாக உத்த ரப்பிரதேசம், பீகார் போன்ற மாநி லங்களுக்கான நிதிநிலை அறிக்கை யாக அமைந்திருப்பதாக குறிப்பிட் டார். அதேசமயம், தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கை கடைக்கோடி மக்க ளுக்கும் நன்மை செய்யும் நோக்கில் அமைந்திருப்பதாக தெரிவித்தார். ஒன்றிய அரசு பாரபட்சம் “நமது மொழிக்கு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் ஒன்றிய அரசு, தமிழ் மொழியை விடுத்து வடமொழி மற்றும் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக் கிறது. மாறாக, தமிழ்நாடு அரசு பழங்குடி மொழிகளுக்கும் உரிய கவனம் செலுத்துகிறது,” என்றார். நாட்டிலேயே அதிக அளவில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதையும், கடந்த 4 ஆண்டுகளில் 10,649 புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதையும் அமைச்சர் பெருமை யுடன் குறிப்பிட்டார். தொழிற்துறையில் சாதனை அதிமுக 10 ஆண்டுகளில் 9  தொழிற்பூங்காக்கள் (1,800 ஏக்கர்) அமைத்த நிலையில், திமுக 4  ஆண்டுகளில் 32 தொழிற்பூங்காக் களை (16,880 ஏக்கர்) அமைத்துள்ள தாக ஒப்பீடு செய்தார். அதே போல் சிட்கோ மூலமாகவும் அதிமுக 10 ஆண்டுகளில் 25 தொழிற்பேட்டை கள் (1,111 ஏக்கர்) அமைத்த நிலை யில், திமுக 4 ஆண்டுகளில் 28  தொழிற்பேட்டைகள் (1,213 ஏக்கர்) அமைத்துள்ளதையும் சுட்டிக்காட்டி னார். பல்வேறு மாவட்டங்களில் டிஜிட்டல் பார்க் திட்டங்கள் செயல் படுத்தப்படுவதையும், செமிகண்டக் டர் துறையில் தமிழ்நாடு முன்னோடி யாக திகழும் வகையில் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதை யும் அமைச்சர் விளக்கினார். காலணா கூட மறுப்பு “பெஞ்சால் புயலால் பாதிக்கப் பட்ட தமிழக மக்களுக்கு நிவாரணம் மற்றும் 100 நாள் வேலைத்திட்ட பாக்கிக்கான நிதியை உடனே விடு விக்க ஒன்றிய அரசு மறுக்கிறது. தமிழக மக்கள் எத்தனை கஷ்டப் பட்டாலும் ‘காலணா காசு, தம்பிடி காசு கூட தர மாட்டோம்’ என்ற நிலைப் பாட்டில் ஒன்றிய அரசு  உள்ளது,” என்று அமைச்சர் குற்றம்சாட்டினார். தலைவணங்கியது  இல்லை தமிழகம் “வரலாற்றில் எந்த காலகட்டத்தி லும் வடக்கிலிருந்து வரும் ஆதிக்கத் திற்கு தமிழகம் தலைவணங்கிய தில்லை. அலெக்சாண்டர், சந்திர குப்த மௌரியர், அசோகர், குப்தர் கள், கனிஷ்கர், அக்பர், ஔரங்க சீப், சிவாஜி - யாராலும் தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை. இந்த வர லாறு, தமிழ் மண்ணிற்கு மட்டுமே உரித்தானது,” என்று அமைச்சர் பெருமையுடன் குறிப்பிட்டார்.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்; இடதுசாரிக் கட்சிகள் கண்டனம்

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் மேற் கொண்டிருப்பதைக் கண்டித்து, தில்லி யில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் கண்ட னக் கூட்டம் நடைபெற்றது.  இந்தத் தாக்கு தலுக்கு எதிராக இந்திய அரசாங்கம் எது வும் கூறாமல் மவுனமாக இருப்பதற்கும் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. காசா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்திருப்பதற்கு எதிரானக் கண்டனக் கூட்டம், புதுதில்லியில் நாடாளுமன்றம் அமைந்துள்ள வீதியில் நடைபெற்றது. பாலஸ்தீன ஒருமைப்பாடு ஸ்தாபனம் இந்தக் கண்டனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் புரிந்துவரும் அட்டூழியங் களைக் கண்டித்து, கணிசமான அளவில் மாணவர்கள் கண்டனக் குரல் எழுப்பினர். இந்தக் கண்டனக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  பங்கேற்ற அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் சுபாஷினி அலி, காசா மீதான தாக்குதல்கள் குறித்து எதுவும் கூறாது, இந்திய அரசாங்கம் மவுனமாக இருப்ப தற்குக் கண்டனம் தெரிவித்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்காது, காசா வில் அப்பாவி மக்களைப் படுகொலை செய்து வரும் இஸ்ரேலை அவர் கண்டித் தார். அமெரிக்க ஆதரவுடன் நடைபெற்று வரும் ஏகாதிபத்தியக் கொள்ளையை அவர் விமர்சனம் செய்தார். அப்பாவி மக்களும் குழந்தைகளும் கொல்லப்படு வது மனிதகுலத்திற்கு எதிரான செயல் என்று அவர் குற்றம் சாட்டினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா  மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அசிஸ் பேஷ்வா உள்ளிட்டோ ரும் கண்டன உரை நிகழ்த்தினர்.  (ந.நி.) 

ரூ. 20 ஆயிரத்தில் தரமான மடிக்கணினி

மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம் குறித்து, சட்டப்பேர வையில் விவாதம் எழுந்தது. “ரூ. 10 ஆயிரத்தில் தரமான லேப்டாப் எப்படி வாங்க முடியும்?” என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பினார். அதற்கு, “2 லட்சம் மாணவர்களுக்கு ரூ. 20,000 மதிப்புள்ள தரமான மடிக்கணினி வழங்க ரூ. 2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது,” என்று அமைச்சர் விளக்கமளித்தார்.

ரூ. 19,287.44 கோடிக்கு துணை மதிப்பீடு
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) இறுதி துணை மதிப்பீடு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ. 19 ஆயிரத்து 287 கோடியே 44 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு ரூ. 2,000 கோடி, கலைஞர் கனவு இல்லத்திற்கு ரூ. 1,400 கோடி, மின் நிறுவனங்களுக்கு ரூ. 1,036 கோடி, போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.1,000 கோடி, பெஞ்சால் புயல் நிவாரணத்திற்கு ரூ. 901.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.