புல்டோசர் அநீதிக்கு எதிரான மக்களின் ஒற்றுமைக்கு வெற்றி
தில்லியில் தமிழர் குடியிருப்புகள் இடிப்பை நிறுத்தியது பாஜக அரசு!
இடதுசாரிக் கட்சிகள் வரவேற்பு
புதுதில்லி, ஆக. 2 - புதிதாக குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்ட பின்னரே, தமிழர்கள் அதிகமாக வசித்துவரும் ஜேஜே குடியிருப்புகள் உள்ளிட்ட குடிசைவாழ் மக்களின் குடியிருப்பு கள் இடிக்கப்படும் என்று தில்லி பாஜக அரசு அறிவித்துள்ளது. இந்த குடியிருப்புகளை சட்ட விரோதமாக புல்டோசர் கொண்டு இடிக்கும் பணியையும் நிறுத்தி யுள்ளது. இதனை இடதுசாரிக் கட்சி களின் கூட்டுமேடை வரவேற்றுள்ளது. புல்டோசர் நீதிக்கு எதிராக மக்களின் ஒற்றுமை எப்போதும் வெற்றி பெறும் என்பது மெய்ப் பிக்கப்பட்டுள்ளது என்றும் அது கூறியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் (எம்.எல்-லிப ரேசன்) கட்சி, புரட்சி சோசலிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து அமைத்த ‘ஆவாஸ் அதிகாரி அந்தோலன்’ அமைப்பின் சார்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தில்லி மாநிலச் செயலாளர் அனுராக் சக்சேனா ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: அறிவிப்பு செயல்வடிவம் பெற வேண்டும்! ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ (2.8.25) நாளிதழ் மற்றும் பல இதழ் களில் வெளியாகியுள்ள தில்லி முதல்வர் ரேகா குப்தாவின் அறிக் கையை இடதுசாரிக் கட்சிகள் வர வேற்கின்றன. மாற்றுக் குடியிருப்பு வசதிகள் அளித்திடாது, குடிசைப்பகுதிகளில் உள்ள எந்த குடியிருப்பும் இடிக்கப்படாது என்று அந்த அறிக்கையில் கூறப் பட்டிருக்கிறது. இதுதான் எங்கள் இயக்கத்தின் பிரதான கோரிக்கை யாகும். எனினும் இது செயல்வடி வம் பெறவேண்டும். இதற்குக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை தில்லி நிர்வாகம் எடுத்திட வேண்டும். மாற்று ஏற்பாடுகள் உடனடி தேவை! (1) ஏற்கெனவே இடிக்கப்பட்ட வீடுகள் குறித்த ஆய்வினை மேற் கொண்டு, அவற்றின் புனர்நிர்மா ணத்திற்கு உடனடியாக ஏற்பாடுகள் செய்யவேண்டும். ஏற்கனவே மதராசி முகாம், பூமிஹீன் முகாம் முதல் அசோக் விகார் வரை ஆயி ரக்கணக்கான குடும்பங்கள் வீடி ன்றி வீதியில் இருந்து வருகின்ற னர். உடனடியாக அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்துதரப்பட வேண்டும். (2) துசிப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட 82 குடி யிருப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்துதரப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. (ந.நி.)