இலங்கைத் தமிழர் வழக்கில் மோசமான வார்த்தைப் பிரயோகம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அணுகுமுறை மனிதாபிமானமற்றது!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்
சென்னை, மே 20 - இலங்கைத் தமிழர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பயன்படுத்திய வார்த்தைகள், வழக்கை கையாண்ட அணுகுமுறை மனித மாண்புகளுக்கும், மனிதாபி மானத்திற்கும் பொருத்தமற்றது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: சட்டவரம்பிற்கு அப்பாற்பட்டது இலங்கைத் தமிழர் ஒருவர், தன் குடும்பத்தினர் நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவும், இலங்கைக்கு சென்றால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால், இந்தியாவிலேயே தங்கி யிருக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை நாடியிருந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வார்த்தைகள் மனிதாபிமானமற்ற தன்மையுடன் சட்டவரம்புகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு கவலையோடு பார்க்கிறது. அகதியாக அங்கீகரிப்பதா, இல்லையா என்பது குறித்த பிரச்சனை யில் சட்டப்படியான நிலைபாட்டை எடுப்பதோ, கோரிக்கையை ஏற்றுக் கொள்வதோ, நிராகரிப்பதோ நீதி மன்றத்தின் உரிமை. ஆனால், அகதி கள் மற்றும் குடியுரிமை குறித்த பிரச்ச னைகள், அரசாங்கத்தின் கொள்கை யோடு சம்பந்தப்பட்டதே தவிர நீதி மன்றங்கள் அகதிகள் பிரச்சனைகள் குறித்த கொள்கைகளை வரையறுக்க முடியாது. நீதிமன்றங்களுக்கு உரிமையில்லை! ஆனால், மனித மாண்புகள் குறித்து சமூகம் மற்றும் சட்டத்தின் பார்வைகள் முன்னேற்றகரமான வடிவ ங்களை பெற்றி ருக்கும் நிலையில், ‘இந்தியா என்ன தர்மசத்திரமா, வேறொரு நாட்டுக் குப் போ’ என்ற- நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் வினோத் சந்திரன் அமர்வின் வார்த்தை பயன்பாடுகள் முற்றிலும் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவை. இன்னொரு நாட்டுக்கு போகச் சொல்வதற்கு நீதிமன்றத்திற்கு எந்த உரிமையும் கிடையாது. இந்தியாவில் இருக்கலாமா, இல்லையா என்பது குறித்த பிரச்சனையில் இந்தியாவில் தங்குவதற்கு இடமில்லை என்று சொல்லலாம். அதைத்தாண்டி தர்மசத்திரம், இன்னொரு நாட்டுக்கு போ என்பதெல்லாம் சட்டத்திற்கும், மனித மாண்புகளுக்கும் கொஞ்சமும் பொருந்தாத வார்த்தைகள். வார்த்தைகள் நீக்கப்பட வேண்டும் உச்ச நீதிமன்ற அமர்வின் இந்த வார்த்தைப் பயன்பாடுகள் எந்த ஆவணங்களிலும் இடம்பெறக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. மேலும், சமீப காலத்தில் தீர்ப்பின் பகுதியாக அல்லாமல் தங்கள் சொந்த கருத்துக்களை நீதிபதிகள் தனிப்பட்ட அவதானிப்புகள் என்கிற முறையில் பிற்போக்குத்தனமாகவும் பொருத்த மற்ற கருத்துக்களையும் வார்த்தை களையும் பயன்படுத்துவது அதி கரித்து வருகிறது. எனவே, இந்திய தலைமை நீதிபதி இந்த பிரச்சனையில் தலை யிட்டு இதுபோன்ற மொழிகள், உச்ச நீதிமன்ற வார்த்தைப் பயன்பாடு களில் இல்லாமல் உறுதி செய்வதை உத்தரவாதப்படுத்த வேண்டுமென வும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.